Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 13, 2012

வீட்டில் இருந்தவர்களை வீதிக்கு கொண்டு வந்த ஜெயா!?

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்து, அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ இன்றி பொதுமக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் நிலை அதிகரித்து வருகிறது. இப்போராட்டங்கள் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினமும் 16 மணி நேர மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால்,அவதிப்பட்டு மக்கள், சில இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திருவள்ளூரில் நடந்த சாலை மறியலில், போலீசார் தடியடி நடத்தினர். வேலூர் மாவட்டம் மேலவிசாரத்தில் நடந்த சாலை மறியல், வன்முறையாக மாறி, மின்சார அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 16 மணி நேரத்துக்கு மேலாக நிலவும் மின்வெட்டால், பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே மின்வெட்டை கண்டித்து, நேற்று இரவு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மி்ன்வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மின்வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேனியில் மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரிய செயல்பாடுகளை முறைபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தந்தி அனுப்பும் போராட்டம் கோவையில் நடந்தது. தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(டாக்ட்) சார்பில் நடந்த தந்தி அனுப்பும் போராட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்று தந்தி அனுப்பினர்.

*போயஸ் கார்டனுக்கு அனைவரும் பாய், தலை அனையுடன் அன்புடன் அழைக்க படுகின்றனர். (ஏனென்றால் 24 மணிநேரமும் மின்(சம்)சாரம் (சசிகலா)இருக்கும் ஒரே இடம் போயஸ்)

2 comments :

இதற்கெல்லாம் ஒரே முடிவு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களும் போராட்டம் நடத்த வேண்டும்....அப்படியும் முடிவு வரவில்லை என்கிற போது ஆட்சியையே முறியடிக்கவேண்டும்......அதற்கு முதலில் மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!