தர்மபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் அரசு பஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். சண்முகம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பங்கு தாரராக உள்ளார்.
இதேபோல் தர்மபுரி பி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் சாஜினி என்கிற நந்தினி (24), சண்முகம் பங்குதாரராக உள்ள ஓட்டலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினியை, சண்முகம் ஓசூரில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் நந்தினி அவரது வீட்டிலேயே இருந்து வந்தார். சண்முகம் அங்கு சென்று வந்தார்.
இதுபற்றி சண்முகத்தின் முதல் மனைவி கவிதாவின் உறவினர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் தினமும் நந்தினிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தனர்.
தினமும் அவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும், ஆபாசமாக திட்டியும் மெசேஜ் அனுப்பி வந்தனர். இதனால் நந்தினி மனவேதனையில் தவித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4, 5 நெம்பர்களில் இருந்து 50 ஆபாச எஸ்.எம்.எஸ்.களும், கொலை மிரட்டல் மெசேஜ்களும் வந்து இருக்கிறது.
இதனால் மனம் உடைந்த நந்தினி அவமானம் தாங்கா மல் விஷம் குடித்தார்.
இதையடுத்து அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் நந்தினியின் உறவினர்கள் திரண்டு ஆபாச, மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
இதற்கிடையே விஷம் குடித்த நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 comments :
நல்ல பதிவு
இரண்டாவது போகும் துணிந்தவர் , இதற்கெல்லாம் பயப்பட வேண்டும். வாழ்கை அவருடையது , உயிர் போனால் வராதது. தற்கொலை செய்யுமளவிற்கு துன்பபடுத்திவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
Post a Comment