Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 27, 2012

உணவை வீணடிப்பவர்களே ஒரு நிமிஷம்!

ஜெனிவா: உலகில் தயாரிக்கப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஓராண்டில் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு வீணடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளில் வீணடிப்பு 36 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஐ.நா. அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

உயர் வருவாய் பிரிவினர் மற்றும் வாங்கும் சக்தி அதிகரித்துள்ள நடுத்தர பிரிவினருக்கு உணவின் மீதான் ஆர்வம் உயர்ந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, உலக மக்கள் தொகையில் சுமார் 150 கோடி பேர் உடல் பருமன், அதிக எடை கொண்டவர்களாக உள்ளதாகவும் அதேநேரத்தில் 86 கோடி மக்கள் ஊட்டச்சத்தான உணவின்றி தவிப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் உணவு வீணாவதைத் தவிர்த்தால், கூடுதல் இயற்கை வளத்தின் தேவையின்றியே, 50 கோடி பேருக்கு உணவு அளிக்க முடியும் என்று ஐ.நா. உணவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமண மண்டபம், ஹோட்டல்கள், வீடுகள் என பல இடங்களில் உணவை வீணடிப்பவர்களை இனி ஒருநிமிடம் யோசிக்க வைக்கும் விஷயத்தை ஐ.நா. உணவு அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

1 comments :

நல்ல ஒரு தகவல். அவசியமான பதிவு.
மிக்க நன்றி.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!