புதுடெல்லி: பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியின் நிறுவனமான பூர்த்தி ஷுகர் அண்ட் பவரில் முதலீடுச் செய்த நிறுவனங்களின் இயக்குநர்களில் பலரும் செக்யூரிட்டி கார்டுகளும், தொழிலாளர்களும்தான் என்பதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.இந்நிறுவனங்களின் வளாகங்களில் வருமான வரித்துறை பகிரங்கமாக நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்தது.
மும்பையில் 12 இடங்களிலும், புனே, நாக்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறுவனங்களில் இயக்குநர்களான 13க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தங்களின் பெயர்கள் எவ்வாறு இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தது என்பதுக் குறித்து தெரியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான முதலீடுகளுடன் துவங்கிய நிறுவனத்திற்கு பின்னர் அதிகளவிலான பணம் குவியத் துவங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த நிதிகளின் மூல ஆதாரங்களைக் குறித்து தெரிவிக்கவில்லை எனில் வரி ஏய்ப்பு நடத்தியதாக கருதவேண்டி வரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், நாக்பூர் மற்றும் மும்பையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிதின் கட்கரி கர்நாடகா பா.ஜ.க தலைவர்களுடன் டெல்லியில் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை ரத்துச் செய்துவிட்டார்.
0 comments :
Post a Comment