Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 6, 2012

காதலுக்கு தாஜ்மகால்! கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு!!

மொகாலய மன்னர் ஷாஜஹான், அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கல்லறை காதல் ஓவியமான தாஜ்மஹாலை கட்டினான்.  இதை கட்ட 22 வருடங்கள் ஆனது. காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த உலகப் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை 'தாஜ்மஹால்' கட்டிடத்தைப் போல் நான்கு மடங்கு பெரிய தாஜ் அரேபியா என்ற ஒரு மாதிரி தாஜ்மஹாலை கட்ட துபாய் கட்டுமானக் கம்பெனி முடிவு செய்துள்ளது.

அதற்குரிய வரைபடங்கள் வரையும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். துபாய் நாட்டின் எமிரேட்ஸ் சாலையில் உள்ள 4 கோடியே 10 லட்சம் சதுர அடிகொண்ட பால்கன் அதிசய நகரத்தின் மையப்பகுதியில் அது அமையவுள்ளது.

இரண்டு வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ள இந்த தாஜ் அரேபியா கட்டிடத்திற்கு 100 கோடி டாலர் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

தாஜ் அரேபியா என்ற கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக விளங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும். 7 கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஓட்டலும் இருக்கும்.

துபாயின் இந்த பால்கன் அதிசய நகரமானது, உலக அதிசயங்களாக விளங்கும் பிரமிடுகள், தொங்கும் தோட்டம், ஈபிள் டவர், தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் பைசா நகரச் சாய் கோபுரம் ஆகியவற்றை உள்ளடக்கி நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் என்று கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!