கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்கள் ஒரு சில வலை தளங்களுக்குள் நுழைய பாஸ்வேர்டு எனப்படும் ரகசிய குறியீடுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதை அறிந்து கொண்டு ஒருவரின் தகவல்களை அறியவும், மோசடி செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க தற்போது, நவீன தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் சம்பந்தப்பட்டவரின் கண் கருவிழி படலங்களின் பார்வை ரகசிய குறியீடாக பயன்படுத்தப்பட உள்ளது.
இது விரைவில் அமலுக்கு வர உள்ளது. அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில் உள்ள சான்மார்கோ பல்கலை கழகத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஓலெக் கொமோ, கோர்ட்சேவ் இதை கண்டுபிடித்துள்ளார். ஒரு பொருளை 2 பேர் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. ஒரு படத்தை பலர் பல கோணங்களாகதான் பார்க்க முடியும். ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் மாறாது. அதன் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானி கொமோ கோர்ட் சேவ் தெரிவித்துள்ளார்.
1 comments :
தகவலுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment