அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன், எளிதில் களைப்பு அடையாமல் இருப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் களைப்பைத் தான் எளிதில் அடைய முடிகிறது.
மேலும் எவ்வளவு தான் முக்கிய வேலையாக இருந்தாலும், அந்த வேலை செய்ய எண்ணம் இல்லாமல் தூங்க வேண்டும் என்றே எப்போதும் தோன்றும். இதற்கு காரணம் நமது வாழ்க்கை முறை தான்.
உடலில் அதிக களைப்பு இருந்தால் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அதாவது வாந்தி, தலைவலி போன்றவை. மேலும் அதே சமயம் அந்த களைப்பு பலவித நோய்களுக்கும் அறிகுறியாக உள்ளது. உதாரணமாக உடலில் தைராய்டு, எய்ட்ஸ், அனீமியா போன்ற நோய்களுக்கு உடல் களைப்பு ஒரு அறிகுறி.
மேலும் அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம் இருந்தாலும், உடல் மிகுந்த சோர்வடைந்துவிடும். சரியான உணவு பழக்கம் இல்லாதது, நாள்பட்ட வலி போன்றவையும் உடல் சோர்வுக்கு காரணங்களாகும்.
ஆகவே இவற்றை சரிசெய்ய வேண்டுமென்றால் நாம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும்.
தூக்கம்: சரியாக தூங்காமல் இருந்ததால் உடலில் சோர்வு ஏற்படும். அதிலும் உடலுக்கு குறைந்தது 6-8 மணிநேர ஓய்வானது தேவைப்படுகிறது. அவ்வாறு சரியான ஓய்வு உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடல் சோர்வு ஏற்படும்.
நோய்கள்: எப்போது பார்த்தாலும் உடல் களைப்புடன் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று இருந்தால், அது உடலில் ஏற்படும் நோயான அனீமியா, தைராய்டு போன்றவற்றிற்கு அறிகுறியாகும்.
வாழ்க்கை முறை: இன்றைய மார்டன் உலகில் வேலைக்கு சென்றால், குறைந்தது 8-9 மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. மேலும் அலுவலகம் நீண்ட தூரத்தில் இருப்பதாலோ அல்லது வேறு ஏதாவது வேலைக்காவோ, பயணம் செய்யும் நிலை உள்ளது. ஆகவே உடல் பலமிழந்து சோர்வடைகிறது.
மனநிலை: ஒருவர் அதிக மன அழுத்ததுடனோ அல்லது மன இறுக்கத்துடனோ இருந்தால், அவையும் உடலை அதிக அளவில் களைப்படையச் செய்கின்றன.
உணவு: உடல் ஆரோக்கியத்துடன் இருக்க போதுமான அளவு ஆரோக்கியமான உணவானது உடலுக்கு தேவைப்படுகிறது. ஆனால் நிறைய பேர் உடல் எடையை குறைக்க, உடலை பிட்டாக வைப்பதற்கு என்று நிறைய ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் சேர்க்கின்றனர். இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.
உடல் பருமன்: ஒல்லியாக இருப்பவர்களை விட குண்டாக இருப்பவர்களின் உடல் விரைவில் களைப்படைந்துவிடும். ஆகவே அதிக உடல் எடையும் களைப்படைவதற்கு ஒரு காரணம்.
எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.
2 comments :
nalla pakirvu!
நல்ல தகவல்.....பகிர்வுக்கு மிக்க நன்றி....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment