டிவிட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி தரக்குறைவான வகையில் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர் என்று திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.
மேலும் அந்த புகாரில், ட்விட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி சிலர் ஆபாசமாக தகவல்கள் பரப்பி வருகின்றனர், இது போன்ற கருத்துகளைக் கூறுபவர்களை ட்விட்டரில் இருந்து துண்டித்தாலும், மீண்டும் வேறு பெயர்களில் ஆபாச கருத்துகளைக் கூறுகின்றனர். மேலும் அவர்கள் ஆபாச படங்களையும் அனுப்புகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும்படி அவர் புகாரில் வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரை விசாரிக்குமாறு பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
சைபர் குற்றப்பிரிவு போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இதில் சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் உள்பட 6 பேர்தான் சின்மயிக்கு இணையதளத்தில் தொந்தரவு கொடுப்பது என தெரியவந்தது. இதையடுத்து சரவணக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 comments :
ada kodumaiye...
Post a Comment