கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த போராட்டம் நடக்கிறது. (இன்றைய செய்தி)
1.75 லட்சம் கோடி,1 .86 லட்சம் கோடி இதை எல்லாம் ஊழல் மூலம் பெற்றும் ,இழந்தும் இருக்கும் இந்த அரசு மக்களின் உயிரை பறிக்கும் அபாயம் உள்ள அணு உலையே நிறுவிய 13000 கோடியே இந்த மக்களுக்காக இழந்தால் என்ன ஆகப்போகிறது. நம் நாட்டின் வளர்ச்சி இதை இழந்தால் கெடாது. நீங்கள் ஊழல் செய்வதை நிறுத்தி, நாட்டில் நடக்கும் ஊழலையும் தடுத்தாலே நம் நாடு நல்ல வளர்ச்சி அடையும். முடியுமா? உங்களால்..? தகுதி உண்டா..?
கூடன்குளம் போராட்டத்தினால் தான் தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவுகிறது என்று கூறுகிற அதிமேதாவிகள். ஈ வி கே எஸ் இளங்கோவன்,நாரயணாசாமி,ஞானதேசிகன்,சிதம்பரம் கருணாநிதி,ஜெயலலிதா, ராமகோபாலன், பொன்ராதகிருஷ்னண் அவர்களிடம் ஒரு கேள்வி :
போராட்டதை இப்பொழுதே நிறுத்திக்கொள்ள தயார் அணு உலை செயல்பட தொடங்கியபின் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருந்தால்,..? நீங்கள் யாரும் இந்தியாவிலேயே இருக்க மாட்டோம் என்று உத்திரவாதம் தர தயாரா.?!!
தமிழ்நாட்டில் மின் பற்றாகுறை 3500.. மெகவாட் கூடன்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் மின்சாரம் 60. மெகா வாட் என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிக்கை கொடுத்துள்ளது.
நமது கேள்வி: கூடங்குள அணு உலைக்கு 1400 கோடி சிலவு செய்தாகிவிட்டது நிறுத்தமுடியாது உயர் நீதி மன்றம்!! அப்போ..! 3500 கோடி சிலவு செய்துவிட்ட சேதுசமுத்திர திட்டத்தை (பரதேசி இராமர் பாலம்) மட்டும் நிறுத்தலாமா?
3 comments :
மக்களின் அச்சத்தை போக்கும் கடமை அரசுக்கு உண்டு.
ஆனால் மத்திய மாநில அரசுகள் அதை உணர்ந்தது போல் தெரிய வில்லை.
நாராயண சாமி பொறுப்பில்லாமல் பேசி வருகிறார்.
nallaa ketteenga....
சும்மா சாட்டையால் அடித்தது போல் கேட்டிங்க...ஆனாலும் சில ஜென்மங்கள் உணர்ந்தது போலவே இல்லையே...
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment