Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, August 9, 2012

ஆண் சாமியாரை தொடர்ந்து பெண் சாமியார்?

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருணாநாக பள்ளிக்கு அருகே உள்ள வள்ளிக்காவு பகுதியில் பெண்சாமியாராக வலம் வரும் அமிர்தானந்தாமயியின் ஆசிரமம் உள்ளது. கடந்த 1-ஆம் தேதி இவர் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது திரண்ட கூட்டத்திற்கு மத்தியில் திடீரென ஒரு இளைஞர் பெண் சாமியாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சார்ந்தவர் ஆவார். அவரது பெயர் சத்னம் சிங். இவர் மன நோயாளியாவார். கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென காணாமல் போன சத்னம் சிங் குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அவர்களின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கேரளா வந்த அவர் கொல்லம் ஆசிரமத்தில் வைத்து மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கொல்லம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொல்லம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் போரூர்கடை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனநல மருத்துவமனையில் உள்ள குளியலறையில் மயக்கமடைந்த நிலையில் சத்னம் சிங் கிடந்தார். உடனடியாக அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது உடலை பரிசோதித்த பொழுது 30க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்துள்ளன. அவரது உள் உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என்பது இன்று நடக்கும் போஸ்ட் மார்ட்டத்தில் தெரியவரும்.

இதனிடையே திருவனந்தபுரம் வருகை தந்த ஆஜ்தக் தொலைக்காட்சி செய்தியாளரும், சத்னம் சிங்கின் உறவினருமான விமல் கிஷோர், போலீஸ் சித்திரவதையில் சத்னம் சிங் கொலைச் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

போலீஸ் கஸ்டடியிலோ, சிறையிலோ, பேரூர்கடை மனநிலை மருத்துவமனையில் வைத்தோ அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சிறையில் வைத்து சத்னம் சிங்கிற்கு காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். மனநோயால் பாதிக்கப்பட்டவரை ஏன் சிறைக்கு கொண்டு சென்றார்கள் என்பது மர்மமாக உள்ளது. இரும்பு கம்பியால் சத்னம் சிங் தாக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சத்னம் சிங்கை கொண்டுவரும் பொழுது அவரது உடலில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததாக மருத்துவமனை நர்ஸிங் அஸிஸ்டெண்ட் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எல்.எல்.பி நுழைவுத்தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற சத்னம் சிங் படிப்பதில் கெட்டிக்காரர் என அவரது உறவினர் விமல் கிஷோர் கூறுகிறார். 2 ஆண்டுகளாக அவர் மனநோயால் பாதிக்கப்பட்டார் என்றும் இது தொடர்பான ஆவணங்கள் தனது வசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சத்னம் சிங்கின் உறவினர்கள் வெளிநாட்டில் நல்ல வேலையில் உள்ளார்கள். போலீஸாரின் தாக்குதலால் சத்னம் சிங் இறந்ததாக விமல் கிஷோர் குற்றம் சாட்டுகிறார்.

இதற்கிடையே வகுப்புவாதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் மூளை குழம்பிய பா.ஜ.க, மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற நபருக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாகவும், முழுமையான விசாரணை தேவை எனவும் முட்டாள்தனமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஏற்கனவே சாய்பாபாவின் ஆசிரமத்தில் 1993 ஜூன் 6-ஆம் நாள் 25 க்கும் 40 வயதுக்குமிடையேயான பருவமுடைய நான்கு மாணவர்கள் அவரை தாக்க முயன்றார்கள் என குற்றம் சாட்டி சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்பொழுது மாதா அமிர்தானந்தமயி என்ற பெண் சாமியாரை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட அப்பாவி மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்குதலால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

அரசு, அதிகார வர்க்கங்கள் ஆன்மீக வியாபாரிகளான சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பதால் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறுவது வழக்கமாகிவிட்டது.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!