Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 3, 2012

இ (ரவு) ப்பணிகளால் இருதய நோய் வர வாய்ப்பு அதிகம் ஆய்வில்!!

லண்டனில் உள்ள இதயம், வலிப்பு நோய்த் தடுப்பு மருத்துவ ஆய்வு மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, வலிப்பு நோய் ஏற்படும் அபாயம் 40 சதவீதம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

வழக்கமான பகல் நேரத்தில் பணிபுரிபவர்களை விட இரவு நேரத்தில் கண் விழித்துப் பணியாற்றுபவர்கள் டீ, காபி போன்றவற்றை அதிகம் குடிக்கின்றனர். அவர்களது உணவுப் பழக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. உடலில் கொழுப்பை அதிகரிக்கும் உணவையே அதிகம் சாப்பிடுகின்றனர்.

இரவுப் பணியில் இருப்பவர்கள் சிறிய அளவில் கூட உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படாமல் போகிறது. இவை அனைத்துமே இதயம் தொடர்பான நோய்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை.

இது தொடர்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொடர்ந்து இரவுப் பணியில் இருப்பவர்கள், இரவு, பகல், மாலை என மாறி மாறி பணிபுரிபவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை உள்ளது தெரியவந்தது.

மாரடைப்பு, வலிப்புநோய் போன்றவை மற்றவர்களுக்கு வருவதைவிட இவர்களுக்கு ஏற்பட 40 சதவீதம் அதிகம் வாய்ப்பு உள்ளது.

இரவு என்பது தூங்குவதற்கான நேரம் என்ற இயற்கை விதி. இதற்கு மாறாக இரவில் வெகுநேரம் கண்விழித்துப் பணியாற்றுவது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல என்பது பொதுவான உண்மை. இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இரவுப் பணி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

எனினும் இப்போதைய இளைஞர்கள் இரவுப் பணியின்போது தவறான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும், இரவுப் பணியின் இடையே புகைப்பிடிப்பது போன்றவை அவர்களை மேலும் ஆபத்தில் தள்ளுகிறது என்று அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!