செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படு வதால், காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு, புதிய கோபுரங்களை நிறுவ அனுமதி வழங்கக்கூடாது என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.
இதுபற்றி தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு வழங்கியுள்ள ஆலோசனையில், ‘கதிர்வீச்சின் அளவைக் குறைப்பதற்காக சாத்தியமான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பறவைகள் மற்றும் தேனீக்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை கடுமையாக பாதிக்கின்றன.
இவற்றை தடுப்பதற்காக காடுகளைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு இதுபோன்ற கோபுரங்கள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது.
எனவே புதிய கோபுரங்கள் நிறுவ அனுமதிக்காமல், பழைய கோபுர கதிர்வீச்சுகளை பகிர்ந்துகொள்வதை கட்டாயமாக்க வேண்டும்’ என சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், செல்போன் கோபுரங்கள் மற்றும் கதிர்வீச் சுகளை உமிழக்கூடிய பிற கோபுரங்களின் இருப் பிடம் மற்றும் அதிர்வெண்கள் குறித்த விவரங்களை தயார் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படியும் அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
செல்போன் கோபுரங்களால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த 2010-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின்படி இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
1 comments :
மனிதர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்போது விலங்குகளை மட்டும் விட்டுவிடுமா என்ன?
Post a Comment