Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, August 15, 2012

தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வு!


தம்பதிகளிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ பிரச்னையால் உப்பு பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர் கதையாகிவிட்டது.

தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை தடுக்க பல்வேறு அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விவாகரத்துகளை தடுக்கும் வழிமுறை குறித்த பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று புதிய நேசல் ஸ்ப்ரே ஒன்றை தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இது.

மன உளைச்சலும் அதனால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகளும் குறித்த ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது. ஆய்வுக்காக அடிக்கடி சண்டையிடும் சுமார் 47 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டு 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

ஒரு பிரிவினருக்கு புதிய நேசல் ஸ்ப்ரே, சண்டையின் போது 5 முறை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இவர்களிடையே நேசல் ஸ்ப்ரே அடித்த 45 நிமிடங்களில் கோபம், ஈகோ குறைந்து சமரசம் ஏற்பட துவங்கியது. மற்றொரு பிரிவினரிடையே சண்டையில் சமரசம் இல்லை. ஆண், பெண் வேறுபாடின்றி தம்பதிகளில் இருவரும் இதனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வில், "தம்பதிகளிடையே சண்டை தவிர்க்க முடியாதது என்ற நிலையில், ஆக்சிடோசின் ரசாயன கலப்புள்ள ஸ்பிரேயை சிறிது மூக்கில் அடித்துக் கொண்டால் போதும். வந்த வேகத்தில் கோபம் மறைந்து விடும். சண்டை வலுக்காது சமரசம் நிச்சயம்.

இந்த ஸ்பிரே கோபத்தை குறைப்பதுடன் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுமூகமான மனநிலையை உருவாக்கும். உடலில் உள்ள சுரப்பிகளில் ஆக்சிடோசின் சுரப்பியும் ஒன்று. இது மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் உள்ளது.

பெண்களுக்கு பிரசவ காலத்தில் இந்த சுரப்பி செர்விக்ஸ் பகுதியை விரிவடைய செய்து பிரசவத்தை எளிதாக்குகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் இது காரணமாகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம், ஆவேசம், ஆத்திரம், சுமூகமான மனநிலைகள் ஏற்படுகின்றன.

எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது இதயத் துடிப்பு, கோபம் அதிகரிக்கும். இந்நிலை தொடர்ந்தால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். இந்த நிலையை ஆக்சி டோசின் நேசல் ஸ்பிரே மாற்றும். இதனால் பாதிப்பும் பக்க விளைவுகளும்’’ கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!