லண்டன்: மனிதனைவிட 3 மடங்கு வேகமாக நீந்தும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒருவேளை அடுத்த ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் இந்த ரோபோவை அனுமதித்தால் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்லும்.
டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மொடோமு நகஷிமா தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவின் பெயர் "ஸ்வுமனாய்ட்' ஆகும்.,நீச்சல் வீரரின் உடலமைப்புடன் ஒத்துப் போகும் வகையில் இந்த ரோபோ 3டி ஸ்கேனர் உடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் நீந்துவது போலவே இது நீந்தும் திறன் கொண்டதாக உள்ளது.
நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவதற்கு மட்டுமல்லாமல், நீச்சல் தொடர்பான ஆராய்ச்சிக்கும் ஸ்வுமனாய்ட் உதவும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளில், பாதுகாப்புப் பணி மற்றும் ரோந்து பணிகளிலும் இந்த ரோபோவை ஈடுபடுத்தலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.
நீர்நிலைகளில் இருக்கும் நீச்சல் வீரர்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவிகளைப் பொருத்துவதும், செயல்பாடுகளை துல்லியமாக கணிப்பதும் சிரமம். ஆனால், இந்த ரோபோவில் இது சாத்தியமாகும். நீச்சல் வேகம் உள்பட பல்வேறு இயக்கங்களை துல்லியமாகக் கணிக்கவும் உதவியாக அமையும்.
முன்னோக்கியும், பின்னோக்கியும் நீந்திச் செல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் அதிவேக நீச்சல் வீரர் என்ற சாதனை படைத்தவரைப் போல மூன்று மடங்கு வேகத்தில் நீந்தும் திறன் படைத்தது ஸ்வுமனாய்ட்.
1 comments :
என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
நன்றி
Post a Comment