இசைப்பிரியர்கள் இசையைக் கேட்பதில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரி்க்கை விடுத்துள்ளார் துபையைச் சேர்ந்த செவிப்புலனாய்வாளர் டாக்டர் ஏ.வி.ரேஷா, துபையில் உள்ள மெட்கேர் என்ற மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் செவி மற்றும் கேட்கும் திறனை ஆய்வு செய்யும் ஆய்வாளர் (audiologist).
தற்போது எம்பி 3 மூலமாக பாட்டு கேட்பது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பிளேயரில் சிறிதளவு சத்தத்துடன் தொடர்ந்து கேட்டாலும் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்துள்ளதாக டாக்டர் ரேஷா தெரிவித்துள்ளார். சத்தத்தின் அளவை டெசிபல் என்று குறிப்பிடுகின்றனர். 90 டெசிபல் சத்தத்துடன் 8 மணிநேரம் ஒருவர் இசையைக் கேட்டால் கண்டிப்பாக அவருடைய கேட்கும் சக்தியை இழந்து விடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த சந்தடிமிக்க நெடுஞ்சாலையில் ஏற்படும் இரைச்சலை 90 டெசிபலுக்கு உதாரணமாக கூறலாம்.
இந்த சத்தத்தின் அளவு 5 டெசிபல் அதிகரித்தால் 4 மணி நேரம் கேட்டாலே அவருடைய கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்றும் 100 டெசிபல் என்றால் 2 மணி நேரத்திலே இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார் இந்த ஆய்வாளர். இசையை கேட்கும்போது எம்பி3 பிளேயர் உட்பட எந்த பிளேயராக இருந்தாலும் அதனுடைய சத்தத்தின் அளவை 50 சதவிகிதம் வைப்பதுதான் பாதுகாப்பானது என ஆலோசனை வழங்கியுள்ளார். 90 சதவிகித சத்தத்துடன் கேட்டால் 15 நிமிடங்களுக்கு மேல் கேட்கக் கூடாது மற்றும் தரம் வாய்ந்த ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் ரேஷா.
* மே 1 - சர்வதேச இரைச்சல் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. Music Listening happiness in danger?.
1 comments :
nalla thakavalkal..!
Post a Comment