Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 4, 2013

எது மத சார்பற்ற நாடு?

இந்தியா மத சார்பற்ற நாடு என்று எல்லாரும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? மேலே படியுங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. பாகிஸ்தான் தேர்தலில் ஹிந்துக்களுக்கு "ரிசர்வ்" தொகுதிகள்.

மத சார்பற்ற நாடு என சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், முஸ்லிம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கவே தடைகள் உள்ள நிலையில்.

"முஸ்லிம் நாடு" என பிகடனப்படுத்திக் கொண்டு செயல்படும் பாகிஸ்தானில், உள்ளூர் முதல் நாடாளுமன்றம் வரை ஹிந்துக்களுக்கு "ஹிந்து ரிசர்வ்" தொகுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் அடுத்த மாதம் (11/05/13) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஹிந்துக்களுக்கு கணிசமான தொகுதிகளை "ரிசர்வ்" தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு முஸ்லிம்கள் போட்டியிடவே முடியாத அளவுக்கு ஹிந்துக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுத்துள்ளது, பாகிஸ்தான் அரசு.

மொத்தமுள்ள 342 நாடாளுமன்ற (National Assembly) தொகுதிகளில், 10 தொகுதிகள் ஹிந்துக்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

மாகாண வாரியாக நடை பெறும் (PROVINCIAL ASSEMBLIES) சட்டமன்றத் தேர்தல்களிலும் "ஹிந்து ரிசர்வ்" தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 104 உறுப்பினர்களை கொண்ட "செனட் சபை"யிலும் 10 ஹிந்துக்கள் இடம் பெறும் வகையில், பாகிஸ்தானின் அரசியல் சாசனத்தின் 18வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, நீதிமன்றமும் அதனை அங்கீகரித்து விட்டது.

மேலும், பாகிஸ்தானின் 1975 ம் வருடத்திய தேர்தல் சட்டத்தின் 51வது பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

4 மாகாணங்களில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகள்: 577., அதில் "ஹிந்து ரிசர்வ்" தொகுதிகளின் எண்ணிக்கை 23

பஞ்சாப் மாகாணத்தில் 8, சிந்துவில் 9, NWFP-ல் (பெஷாவர்) 3, பலூசிஸ்தானில் 3 என, மொத்தம் 23 தொகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிடவே முடியாது. 

முஸ்லிம்களை கருவறுக்கும் இங்குள்ள பாசிச சக்திகளுக்கும், பாகிஸ்தானின் பரந்த மனப்பான்மைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.(இதையெல்லாம் 
மக்களுக்கு அறியத்தருவது  இல்லை வந்தேறி பார்ப்பன ஊடகங்கள்).

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!