Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 26, 2013

துயரம் தெரியாதவர்கள் துரோகம் என்று புலம்புகிறார்கள்?

அந்த பனிமலையில் இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பால் தினம் தினம் கொல்லப்படும் மக்களின் துயரம் தெரியாத இந்திய தேசிய வாதிகள் புலம்பி தவிக்கிறார்கள் பிரிவினைவாதிகள் என்று.

1947க்கு பிறகு காஸ்மீரின் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இனைக்கப்பட்ட துரோக கதை உங்களுக்கு என்ன தெரியுமா.

நேருவின் பொதுவாக்கெடுப்பு வாக்குறுதியும், இன்றுவரை பாகிஸ்தானும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் என அந்த மக்கள் சுதந்திர காஸ்மீரத்திற்காக போராடுவதும் உங்களுக்கு தெரியுமா.

அங்கே போராடுவது பெரும்பாண்மையான மக்கள் முஸ்லீம்கள் என்ற காரணத்தால் அந்த போராட்டம் உங்களுக்கு ஒவ்வாமையாக தெரிகிறது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் ஒருங்கினைப்பை ஏற்படுத்துவதும் ஒருவருக்கு ஒருவர் துயரங்களை பகிர்ந்துகொள்வதும் ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திற்காக குரல் கொடுப்பதும் தாங்கமுடியாத இந்திய வாதிகள் மோசமான பரப்புரையை நாம் தமிழருக்கு எதிராக பரப்புகிறார்கள்.

யாசின் மாலிக்கை அழைப்பதின் மூலம் எப்படியான விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டும் என தெரிந்தே ஒரு துனிச்சலான முயற்சியை செய்திருக்கும் நாம் தமிழர் கட்சி தன் மீதான முஸ்லீம் விரோத கட்சி என்ற பார்வையையும், அதன் மீதான பொய் பரப்புரைகளையும் உடைத்திருக்கிறது. முஸ்லீம்களை நாம்தமிழர் கட்சிக்கு எதிராக கொம்பு சீவி விடும் தங்கள் முயற்சிகள் நிறைவேற்ற முடியாதவர்கள் கிடந்து புலம்புகிறார்கள்.

கடலூர் கூட்டத்தில் யாசின் மாலிக் பங்கேற்றது ஒருசிலருக்கு தவறாக தோன்றுகிறது. அது ஏன்? அவர் முஸ்லிம் என்பதாலா அல்லது அவர் வேறு இன மக்களுக்காக போராடுபவர் என்பதலா என்று புரியவில்லை.

இந்தியாவும் வேண்டாம் பாகிஸ்தானும் வேண்டாமென்று காஷ்மீரை தனி நாடாக கேட்பது இவர் செய்த குற்றம் என்றால் ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்காக நாம் தனி நாடு கேட்டதும் குற்றம் தானே.

இலங்கை ராணுவம் ஈழத்தில் கொலைகளும் கற்பழிப்புகளும் செய்ததை போல் தான் காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்கிறது செய்துவருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் விதவைகள் அதிகம் வாழும் மாநிலமே காஷ்மீர் தான்.

இலங்கை ராணுவம் தவறு செய்தாலும் இந்திய ராணுவம் தவறு செய்தாலும் தவறு தவறுதான் அதை ஒப்புகொள்ள சிலருக்கு மனம் மறுக்கிறது அது ஏன்? காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசின் மாலிக் தமிழகத்திற்கு வருகை தந்தது காவிகளுக்கு தலையில் வெந்நீரை அள்ளி ஊற்றியது போல கிடந்து குதிக்கிறார்கள்.

தமிழகம் இன விடுதலையை நோக்கி மாத்திரம் முன்னேறி செல்லவில்லை காவிகளிடம் இருந்து விடுதலையையும் சேர்த்து விரும்புகிறது. அதற்கான முன்னெடுப்புகளில் ஒன்று தான் இன்று சீமானுடன் யாசின் மாலிக்.

தமிழன் வாழும் இடத்தில் தமிழ் அவனை ஆளட்டும்! இசுலாமியன் வாழும் இடத்தில் அவன் இசுலாமியனாக வாழட்டும்!!.


0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!