நாட்டின் முதுகெலும்பாக இருக்கவேண்டிய உள்துறையோ ஒரு அமைப்பை கண்டு அச்சபடுகிறது என்றால் அது மிகை இல்லை.
ஆர்.எஸ்.எஸ்ஸின் மையங்களில் ஆயுதபயிற்சியை கண்டுகொள்ளாத காவல்துறை,உள்துறை மற்றும் இந்திய அரசு.
இந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மையங்களில் நடக்கும் ஆயுதப்பயிற்சிகளை மத்திய, மாநில அரசுகளும் காவல்துறை, உளவுத்துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளன.
நாக்பூர், புனே மற்றும் போன்ஸாலா ராணுவ பள்ளிக்கூடத்தில் மிகச்சிறந்த ஆயுதப்பயிற்சிகள் தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தளபதிகள் சிலரும் இப்பயிற்சி மையங்களில் பயிற்சிகளை அளிக்கின்றனர். மாலேகான் - நந்தத் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளிகள் போன்ஸாலாவின் ஆசிரியர்கள் ஆவர். தண்டயுத்தா, களரி, ஆயுத பயிற்சி முறைகள், நெருப்பு வளையத்தின் உள்ளே குதிக்கும் ராணுவ பயிற்சி முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் இம்முகாம்களில் அளிக்கப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் பங்கேற்று பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து வெளியேறிய பலர் ஊடகங்களில் இத்தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
21 நாட்கள் நீண்ட முகாம்களில், இதில் பங்குபெறும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை தவிர வேறு ஆர்.எஸ்.எஸ் காரர்களை கூட உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. தற்போது கேரளா மாநிலத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் ஆயுதப் பயிற்சி முகாமில் தமிழகத்தைச் சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் பெரும்பாவூர் வளையன் சிறங்கரா என்.எஸ்.எஸ் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 378 பேரும், பாறசாலையில் உள்ள பாரதீய வித்யா பீடம் செண்ட்ரல் பள்ளிக்கூடத்தில் 343 பேரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய ஆயுத பயிற்சி மையமான வியாஸா வித்யாபீடத்தில் 342 பேரும் பங்கேற்பதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடே கூறுகிறது.
வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்கும் பயிற்சி முகாம் பேராமங்கலம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீதுர்கா விலாஸம் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.
தற்போது நடைபெற்று வரும் பயிற்சி முகாம்களில் ஆயுத பயிற்சியை அளிப்பது வெளிமாநிலங்களைச் சார்ந்த ஆயுத பயிற்சியாளர்கள் என்றும், இம்முகாம்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்கள் பங்கேற்பதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன., பயங்கரவாத அரைக்கால் டவுசரை கண்டு உளத்துறை அமைச்சகமே அச்சப்படுவதாக மனித ஆர்வகளர்களின் கருத்து.(இந்த பயங்கரவாத அமைப்பிடம் உள்துறை அமைச்சர் சிண்டே மன்னிப்பு கேட்டதை நினைவில் கொள்க).
2 comments :
பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தொடர்பை மறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. thoothu
பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் உள்துறை அமைச்சர் சிண்டே மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்பது சிண்டைக்கு தெரியும்.பயந்தவன் நிம்மதியாக இருந்ததில்லை, ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழியாமல் இருந்ததுமில்லை
Post a Comment