Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 7, 2013

அறிவில் அகிலம் தொடும் அபிராமி?

சாதிக்க துடிப்பவருக்கு அங்க குறைவு ஒன்றும் ஒரு குறையில்லை என்பதற்கு அறிவில் அகிலம் தொடும் அபிராமி ஓர் உதாரணம்.

கல்விக்கு உயரம் ஒரு தடையா? இல்லவே இல்லை என சாதித்து காட்டியுள்ளார் மூன்று அடி உயரம் உள்ள 28 வயது பெண் அபிராமி.

'என் சொந்த ஊர் சங்ககிரி அருகே உள்ளே நல்லப்பநாயக்கன்பட்டி. என் அப்பா அம்மா இருவரும் பூ விற்கும் கூலி வேலை செய்பவர்கள். நான் பிறக்கும் போதே வளர்ச்சி குறைந்த மாற்று திறனாளி. என் உடலிற்கு தான் வளர்ச்சி குறைவு என் சிந்தனைக்கு இல்லை.... என்னால் முடிந்த அளவு படித்து பி.காம் முடித்து எம்.காம் பவானியில் படித்து முடித்தேன்.

எனக்குள் நம்பிக்கை நிறைய உள்ளது. ஆனால், எங்களை போன்ற மாற்று திறனாளிகளை நம்பும் சமூகம் தான் இல்லை. எனவே, சரியான வேலை கிடைக்கவில்லை நான் பயின்ற தனியார் கல்லூரியிலேயே தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறேன்... அந்த வருமானம் என் குடும்பத்திற்கு போதவில்லை. என் தம்பி தற்போது பி.எஸ்.சி படித்து வருகிறான் அவனையும் மேல் படிப்பு படிக்க வைக்க வேண்டும். இதற்கு நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். எனவே என்மேல் நம்பிக்கை வைத்து மாற்று திறனாளிகள் சிறப்பு பிரிவின் கீழாவது அரசு சார்பில் ஏதாவது பணி வழங்க வேண்டும்....அவ்வாறு வழங்கினால் என் பணியை நேர்மையாகவும் சிறப்பாகவும் செய்து தேசத்தை காத்து அதன் வழி என் குடும்பத்தையும் வளர்த்துகொள்வேன் எனக்கொரு வாய்ப்பு தாருங்கள்' என சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூசனத்திடம் மனு கொடுத்தார்... அவர் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

சினிமா நடிகைகளுக்கு கொடுக்கிற ஆதரவ இந்த மாதிரி பெண்களுக்கு கொடுங்க.உடலின் உயரம் குறைவு ஆளுமைமிக்க அபிராமியின் அறிவின் உயரம் அகிலம் தொடுகிறது.

2 comments :

அபிராமி அவர்களுக்கு பாராட்டுக்கள்... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

நன்றி...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!