இந்தியாவிலிருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை அதிக அளவில் வெளிநாட்டு வேலைக்கு சென்றனர். தற்போது அந்த இடத்தை உ.பி., மாநிலம் பிடித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் கார்பென்டர், எலக்ட்ரீஷியன், கட்டட மேஸ்திரிகள், டிரைவர்கள் உள்ளிட்ட கட்டடத் தொழிலாளர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது, வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் கட்டடத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இப்படி வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரம் ஒன்றை, மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், பணியின் நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களில் 80 சதவீதத்தினர் கட்டட தொழிலாளர்களாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிலிருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை அதிக அளவில் வெளிநாட்டு வேலைக்கு சென்றனர். தற்போது அந்த இடத்தை உ.பி., மாநிலம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் இருந்து கடந்த 2009 ம் ஆண்டில் 1.25 லட்சம் பேர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். அதே ஆண்டில் கேரள மாநிலத்தில் 1.19 லட்சம் பேர் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் 78 ஆயிரத்து 841 பேரும், ஆந்திராவில் 69 ஆயிரத்து 233 பேரும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.
கடந்த 2010 ம் ஆண்டில் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 68 ஆயிரத்து 375 பேரும், கேரளாவில் 45 ஆயிரத்து 278 பேரும் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர். இது, தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே. அலுவலக வேலைகள் தொடர்பான பணிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. தென்னிந்தியாவில், கேரளா தவிர தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் அதிமானோர் வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாக வேலைக்குச் செல்கின்றனர். வட மாநிலங்களில், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து செல்கின்றனர்.
0 comments :
Post a Comment