Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, December 28, 2010

மின் கட்டணம் இணைய தளத்தில்

இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது,' என, மதுரை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் ஆ. நச்சாடலிங்கம் தெரிவித்தார்.


அவரது அறிக்கை: தாழ்வழுத்த நுகர்வோர் தங்களின் மின் கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தும் வசதியை வாரியம் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவையை அடுத்து இத்திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை இணைய தளம் வழியாக கடன் அட்டை, வங்கி அட்டை மற்றும் வங்கி இணைய தள சேவை மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.கடன் அட்டை: ஆக்ஸீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளின் கடன் அட்டைகளுக்கு 2.09 சதவீதம் சேவை கட்டணம்.

வங்கி அட்டை: இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கிகளின் கடன் அட்டைகளுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை சேவை கட்டணம்.வங்கி இணைய தள சேவை: இந்தியன் வங்கி, ஆக்ஸீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் சேவை கட்டணம் இல்லை. இச்சேவை எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., உட்பட பல வங்கிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

நுகர்வோர் தங்களது இணைய தள சேவையை பெற தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் அலுவலக இணைய தளம் http://www.tneb.in க்கு சென்று முதல் முறை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது. பின், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் மின் இணைப்பிற்கு கம்ப்யூட்டர் மூலம் பணம் செலுத்தலாம்.நுகர்வோர்கள் தாங்கள் பணம் செலுத்திய விவரங்கள் மற்றும் கட்டண விவரங்களை http:www.tnebnet.org/newlt/menu2/html என்ற இணைய தளத்தின் மூலம், தங்களது மண்டலம் (உதாரணம் மதுரை, கோவை) மற்றும் பத்து இலக்க மின் இணைப்பு எண்ணை குறிப்பிட்டு அறிந்து கொள்ளலாம். பணம் செலுத்தும் சேவையை நேரிடையாக பெற httb://www.tnebnet.org/awp/TNEB/index.php என்ற இளைய தளத்தின் மூலமாகவும் பெறலாம். இணைய தள கட்டணம் செலுத்தும் சேவையில் வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ltbill@tnebnet.org. என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!