Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, December 30, 2010

தேர்தல்? மே முதல் வாரத்தில்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதனிடையே, பி.எட். உள்பட அனைத்து  வகையான கல்லூரி படிப்புகளுக்கான தேர்வையும் ஏப்ரலிலேயே முடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் திமுக அரசின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டைகள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க, அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் தவிரமாக ஆலோசித்து வருகிறது.
 
 இதுவரை இரண்டு கட்டமாக ஆலோசனைகளை நடத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. முதலில் நடந்த ஆலோசனையில், தமிழகத்தில் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
 
 இரண்டாவதாக அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து அதிலிருந்து தேர்தல் செலவுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையருடன்...இரண்டு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியும் அரசியல் கட்சிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
 
 "சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து பொதுவாக மட்டுமே ஆலோசிக்கப்படுகிறது' என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது? பண பட்டுவாடாவைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது? என்பன குறித்து அரசியல் கட்சிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தப்படுகிறது.  அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
தேர்வுகளும்...தேர்தலும்...சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாக்குச் சாவடிகளாக மாறும். எனவே, தேர்தல் நேரத்தில் அவைகள் அனைத்தும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும்.  இதனால், அனைத்துத் தேர்வுகளையும் ஏப்ரலுக்குள் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி 28-க்குள் முடிந்து விடுகின்றன.
  பி.எட். போன்ற கல்லூரித் தேர்வுகள் ஏப்ரல் 26-ம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.எட். தேர்வு ஏப்ரல் 22-ல் தொடங்கி 26-ல் முடிவடைகிறது. ஏப்ரலுக்குள் தேர்வுகள் நிறைவடைவதால் அதன்பின் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனுக்கள் ஏப்ரல் இறுதி வரை பெறப்பட்டு, மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!