Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, December 30, 2010

இரு தலைகள் மறுபடியும் சந்திக்குமா ?

அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்க வரும் 2ம் தேதி இரவு சென்னை வருகிறார். 3ம் தேதி காலை, அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கிறார். அதன்பின், அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை பிரதமர் துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அழைப்பிதழை, துணை முதல்வர் ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து வழங்கியிருந்தார்.

இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு பின், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னை நிலவி வருகிறது. முதல்வருடன் ஒரே மேடையில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது என, காங்கிரசார் சிலர் வலியுறுத்தி வந்தனர். இதுதவிர, விடுதலைப்புலிகளால் பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் போன்றவர்களுக்கு ஆபத்து இருப்பதாக, உளவுத் துறை எச்சரித்திருந்தது.

இந்நிலையில், பிரதமரின் அடையாறு பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை திறக்க பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடப்பட்டிருந்தது. தமிழக கடற்கரை மண்டல மேலாண் குழுமம், இப்பூங்காவை அமைக்க தனது பரிந்துரையை, மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது.

ஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இதுவரை பெறப்படாததால், பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3ம் தேதி, இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க வரும் போது, பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்க இயலவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின், பூங்கா திறக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் தமிழக அரசு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்காவிட்டாலும், சென்னையில் தங்கும் அவரை முதல்வர் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை வரும் பிரதமரை துணை முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், விமான நிலையத்தில் வரவேற்க உள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!