Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, December 29, 2010

கவுன்ட் டவுண்,. உலக கோப்பை கிரிக்கெட்


ஒன்பதாவது உலக கோப்பை தொடர் கடந்த 2007ல், முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்தது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகள் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின.

இத்தொடரின் லீக் சுற்றில் அதிர்ச்சி முடிவுகளை காண முடிந்தது. அனுபவ பாகிஸ்தான் அணி(132), அயர்லாந்திடம்(133/7) வீழ்ந்தது. இதே போல முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி(191), வங்கதேசத்திடம்(192/5) தோல்வி அடைந்தது. இதையடுத்து, இந்திய துணை கண்டத்தின் இரண்டு நட்சத்திர அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேற, உலக கோப்பை போட்டிகள் களை இழந்தன.

முதலாவது அரையிறுதியில் இலங்கை அணி, நியூசிலாந்தை வென்றது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

ஓவர் குறைப்பு:பார்படாசில் நடந்த பைனலில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. மழை காரணமாக ஓவர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட் அதிரடி துவக்கம் தந்தார். பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்த இவர், 149 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலக கோப்பை பைனலில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார். ஹைடன்(38), கேப்டன் பாண்டிங்(37) அசத்த, 38 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.

இலக்கு மாற்றம்:கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஜெயசூர்யா(63), சங்ககரா(54) நம்பிக்கை தந்தனர். அடுத்த வந்தவர்கள் ஏமாற்றினர். இந்த நேரத்தில் மீண்டும் மழை குறுக்கிட, 36 ஓவரில் 269 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 33வது ஓவரில் வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இப்போட்டியை அடுத்த நாள் நடத்தலாம் என அம்பயர்கள் தெரிவித்தனர். ஆனால், இலங்கை கேப்டன் ஜெயவர்தனா ஆட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்த ஒத்துக் கொண்டார். இறுதியில் இலங்கை அணி 36 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து, தோல்வி அடைந்தது. "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்தது

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!