12 வருட காத்திருப்பிற்கு இறைவன் சுரய்யா ஃபவ்லிக்கு 6 குழந்தைகளை அளித்துள்ளான். இதனால் மகிழ்ச்சியடைந்த எகிப்திய தம்பதியினர் செலவுகளை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அபுதாபியில் 2000 திர்ஹம் சம்பளத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் சுரய்யாவின் கணவர் ஸாயித் முஹம்மது. குழந்தைகள் இல்லாததன் காரணத்தினால் பல ஆண்டுகளாக சிகிட்சைப் பெற்றுவந்தனர் இருவரும்.
சிகிட்சைக்கான செலவு இவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்ந்த இவர்களுக்கு இறைவனின் கருணையினால் 6 குழந்தைகள் என டாக்டர்கள் அறிவித்தவுடன் மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் செலவுகளை நினைத்து வருந்துகின்றனர். 3 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் மாதம் முழுமை அடையுமுன்பே பிறந்துள்ளதால் அவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் உள்ளன.
2000 திர்ஹம் சம்பளத்தில் 1500 திர்ஹம் அபுதாபி ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள சிறிய வீட்டு வாடகையாக ஸாயித் முஹம்மது செலுத்துகிறார். மீதமுள்ள 500 திர்ஹத்தில் குடும்பத்தை சிரமத்தில் ஓட்டவேண்டும் அவருக்கு. குழந்தைகளின் ஹெல்த் இன்ஸூரன்சுக்கு கூட தன்னிடம் பணமில்லை என கவலைக்கொள்கிறார் ஸாயித்.
கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி குழந்தைகள் பிறந்த பொழுதும் இதுவரை மருத்துவமனையை விட்டு செல்லவில்லை அவர்கள். கார்னிச் மருத்துவமனையில் சில நாட்கள் அவசர சிகிட்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு அடி வயிற்றில் அறுவை சிகிட்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ்
0 comments :
Post a Comment