சிலோன்' இனி "ஸ்ரீலங்கா' என்று அழைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது, "சிலோன்' என்றும், "ஸ்ரீலங்கா' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வெவ்வேறு பெயர்களே குறிப்பிடப்பட்டு வருகின்றன. அந்நாட்டு மின்சார வாரியம், "சிலோன் மின்சார வாரியம்' என்றும், பெட்ரோலிய நிறுவனம், "சிலோன் பெட்ரோலிய நிறுவனம்' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு அரசு சிலோன் என்ற பெயரை அனைத்து ஆவணங்களிலும் ஸ்ரீலங்கா என்று ஒரே பெயராக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு தகவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி காலத்திற்கு முன்பு ஸ்ரீலங்கா "செய்லாவோ' என்று அழைக்கப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்த பெயர் மருவி "சிலோன்' ஆனது. விடுதலைக்குப் பின்னர், குடியரசானதும், "சிலோன்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. தற்போது, ஸ்ரீலங்கா, சிலோன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி ஸ்ரீலங்கா என்று ஒரே பெயராக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இனி அனைத்து ஆவணங்களிலும், ஸ்ரீலங்கா என்றே அழைக்கப்படும். சிலோன் என்ற பெயரில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பெயரும் விரைவில் மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 comments :
Post a Comment