மொள்ளமாறி, முடிச்சவிக்கித்தனம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதையெல்லாம் தாண்டிவிட்டார்கள் இந்த அரசியல் பொறுக்கிகள்.
லோக் ஆயுக்தா என்றால் நமெக்கெல்லாம் தெரியும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள், அது ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும். லோக் ஆயுக்தாவின் சட்டப்படி புதிய லோக் ஆயுக்தா குழுவுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர் வசம் இருந்தது. இதன் அடிப்படையில்தான் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா செயல்பட்டுவருகிறது.
ஆனால் குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி, மாநில அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் லோக் ஆயுக்தா குழுவை நியமிக்க மறுத்து வந்தார். இதனால் கடுப்பான மாநில ஆளுநர் கமலா நீதிபதி R.மேத்தா என்பவரை லோக் ஆயுக்தவாக நியமித்தார். இதை எதிர்த்து மோடியின் மாநில அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தது.
உயர் நீதி மற்றும் உச்ச நீதிமன்றங்களால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பாக ஆளுநர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தே இறுதியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மதிக்காத மோடி சர்வாதிகாரி போல் தன் ஊழல்கள் வெளிவந்து விடகூடாது (தான் செய்த அயோக்கியத்தனம்) என்று தன்னை காப்பற்றி கொள்ள தானே ஒரு புதிய மசோதாவை சட்ட மன்றத்தில் அறிமுகம் செய்துள்ளார்.
மோடி கொண்டு வந்த போலியான புதிய மசோதாவின் படி மாநில ஆளுநர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் அதிகாரம் பிடுங்கப்பட்டு அது மாநில அரசின் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதவாது இனி லோக் ஆயுக்தா நியமனங்களை அவர்கள் செய்ய முடியாது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த புதிய மசோதாவின்படி எந்த அதிகாரிக்கும் லோக் ஆயுக்தா விசாரணை வரம்பில் இருந்து விதி விலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
மேலும், லோக் ஆயுக்தா வழக்கு விசாரணை தொடர்பாக எவராவது பத்திரிகையில் செய்தி வெளியிட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு தெரிவித்தாலோ 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் இந்த புதிய மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் ஊழல் மற்றும் மொள்ளமாரிதனத்தை வெளிப்படுத்தவே லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதை முற்றிலும் மாற்றி அமைத்து ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டுள்ளார் மோடி. குஜராத்தை பொறுத்தவரையில் லோக் ஆயுக்தா செத்த பாம்பு மாதிரி இதல்லவோ மொள்ளமாறி, முடிச்சவிக்கித்தனம் என்பது.
1 comments :
நல்லுள்ளம் கொண்ட சகோதர்கள் கவனத்திற்கு:
இந்த பயங்கரவாதியை எதிர்க்கிறோம் என்ற பெயரால் பயங்கரவாதியின் படங்கள் இலவசமகாத் தானே கிடைக்கிறது என படத்தை வெளியிட்டு விமர்சிக்கிறீர்கள்
காவி பயங்கரவாதி மோடி பற்றிய செய்தித் திணிப்புக்களை காவி பயங்கரவாத ஊடகங்கள் கடமையே என்று அனுதினமும் செய்தித் திணிப்பு செய்து மக்களை மூளைச் சலவை செய்து வரும் நிலையில், நாமும் பயங்கரவாதியின் படங்களை வெளியிட்டு விமர்சித்தால் மேலோட்டமாக பார்ப்பவர்கள் இதுவும் செய்தி என்ற நிலையில் தான் பார்ப்பார்கள்.
மோடிக்கு எயிட்ஸ் என்று ஊடகங்கள் தினமும் செய்தி வெளியிட்டால் கூட இந்த பயங்கரவாதியைப் பொறுத்தவரை விளம்பரமாகத் தான் ஆகும். எனவே பயங்கரவாதியின் படத்தை வெளியிடாமல் இவர் செய்த பயங்கரவாத படங்களை வெளியிட்டு விமர்சிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மக்களுக்கு உண்மையான செய்தியும் சென்றடையும். chelvan.
Post a Comment