ஹைதரபாத் நகரின் புகழ் மிக்க வரலாற்று சின்னமான சார்மினார் அருகே உள்ள கோவில் சட்டவிரோதமானது என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹைதராபாத்தை சார்ந்த மசூத் என்பவர் சார்மினார் அருகே உள்ள கோவிலின் சட்ட அந்தஸ்தை குறித்தும் அதற்கான ஆதாரங்களையும் இந்திய தொல்லியல் துறையிடம் கேட்டிருந்தார்.
அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் புராதன சின்னங்கள் சட்டத்தின் படி சார்மினார் அருகே கட்டப்பட்டுள்ள கோவிலை சட்டவிரோதமானது என்று கருதுவதாக கூறியுள்ள தொல்லியல் துறை மூன்று புகைப்படங்களையும் அளித்துள்ளது. 1960ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சார்மினார் மாத்திரம் இருக்க 1980 எடுக்கப்பட்ட படத்தில் சிறிய கோவிலும் 2003ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கோவில் மேல் சிறிய கூரையும் உள்ளது.
மேலும் இப்புகைப்படங்கள் தொல்லியல் துறையால் எடுக்கப்பட்டது என்பதால் இதன் நம்பகத்தன்மையில் யாரும் சந்தேகப்பட முடியாது என்று கூறியுள்ள தொல்லியல் துறை இது தொடர்பான ஆவணங்களை மனுதாரார் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்று கூறியுள்ளது.
சார்மினார் அருகே உள்ள கோவில் பிரச்னையை வைத்து தான் சில மாதங்களுக்கு முன் பிரவீண் தொகாடியா இக்கோவிலை கட்ட அனுமதிக்கவில்லையென்றால் ஹைதராபாத்தை அயோத்தியாக்குவோம் என்று கூறியதும் அதை தொடர்ந்து ஹைதராபாத் நகர் பதற்ற நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடம் புகளிடமாக மாறுமோ என்று அச்சத்தில் உள்ளனர் சார்மினாரை சுற்றி உள்ள மக்கள்.

0 comments :
Post a Comment