ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்தந்த கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் கார்டுகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது. புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில்http://
இந்த ரசீதை கார்டின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி, கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.
3 comments :
நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
Very Useful message for all
பயனுள்ள தகவல்
Post a Comment