Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 1, 2013

இளம் வயதினரை பாதிப்புள்ளாகும் சமூக வலை?


வாஷிங்டன்: இணையதளத்தில் அதிகமானோர் ஃபேஸ்புக் மூலமாக பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மிரட்டி காரியம் சாதிப்பதில் வெளியே உள்ளவர்களை விட இணையதளத்தில் அதிகரித்து வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
87 சதவீதம் பேர் மார்க் ஷுக்கர்பர்கின் ஃபேஸ்புக் மூலம் பாதிக்கப்படுகின்றனர். ஐந்தில் ஒருவர் ட்விட்டர் மூலம் ஏமாற்றப்படுகின்றனர். மிக அதிகமாக பாதிக்கப்படுவது 19 வயது இளம் பருவத்தினர் ஆவர்.
ஆன்லைனில் மிரட்டலை சந்திக்கும் 49 சதவீதம் பேர் வெளியேயும் க்ரிமினல்களின் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். பாதிக்கப்படுவோரில் 37 சதவீதம் பேர் மட்டுமே சோசியல் நெட்வர்க்குகளில் பகிர்ந்துகொள்கின்றனர். பல இளைஞர்களும் சைபர் ஸ்பேஸில் நடக்கும் தாக்குதல்களை கண்டு மெளனம் சாதிக்கின்றனர். இதனை பீட் புல்லியங் என்ற மனித உரிமை அமைப்பின் ஸ்தாபகரும் சி.இ.ஓவுமான எம்மா ஜேன் க்ராஸ் கூறுகிறார்.
இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுவோர் மன அழுத்தம், சோம்பேறித்தனம் ஆகியவற்றிற்கு அடிமையாகின்றனர். சில வேளைகளில் தற்கொலைக்கு முயலுகின்றனர். பாதிப்பிற்கு ஆளாகும் இளம் பருவத்தினர் பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ இவற்றை தெரிவிப்பதில்லை. இதனை சுயமாக கையாளும் போது ஆபத்தில் சிக்குவதாக மீடியா சைக்கோலஜிஸ்ட் ஆர்தர் காஸிடி கூறுகிறார். ஆன்லைனில் இளம் பெண்கள்தாம் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் இதற்கு மாற்றமாக ஆய்வின் முடிவு அமைந்துள்ளது. தனது துணிச்சலை காட்டும் முயற்சியில் பல இளம் வயது ஆண்களும் சதி வலையில் சிக்குகின்றனர்.
13-19 வயது பதின் பருவ வயதினரில் 13 சதவீதம் பேர் ப்ளாக்பெர்ரி மெஸஞ்சர் வழியாக பாதிக்கப்படுகின்றனர். 8 சதவீதம் பேர் Bebo மூலமும், 4 சதவீதம் பேர் Whatsapp மூலமும் பாதிக்கப்படுகின்றனர்.
Opinium ஆய்வு 2000க்கும் மேற்பட்ட பதின்பருவ(teenagers) வயதினரிடம் நடத்தப்பட்டது. இதன் ஆய்வு முடிவுகளை விரிவாக காண www.knowthenet.org.uk/trolling என்ற இணையதளத்தில் பார்வையிடவும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!