நியூயார்க்:பெண்களை விட காதல் வசப்படுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதிர் பால் இனத்தவரிடம் வெகு சீக்கிரம் வீழ்வது பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர். 48 சதவீதம் இளைஞர்கள் முதல் பார்வையிலேயே காதலில் வீழ்கின்றராம். ஆனால், பெண்களோ 28 சதவீதம் பேர் மட்டுமே முதல் பார்வையில் காதல் வசப்படுகின்றனர். புதிய நூற்றாண்டில் காதல் மற்றும் உறவுகள் குறித்து அறிவதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வில் இந்த சுவராஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. புதிய தலைமுறையினரின் மாறிய பாலியல் அணுகுமுறையும் , உறவுகளும் அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தபப்ட்டது.10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பாலியல், ஈர்ப்பு, இதர உடல்ரீதியான சிறப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 1300 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் சர்வேயில் பங்கேற்றவர்களிடம் அளிக்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற 74 சதவீதம் பேரும் தங்களின் இணையின் மீது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.15 சதவீதம் பேர் சொந்த இணையை தவிர தவறான உறவையும் வைத்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதி ஆண்களும், 19 சதவீதம் பெண்களும் திருமணம் அல்லாத முறைகேடான உறவுகளில் விருப்பம் உள்ளவர்கள். கைகளை சேர்த்து பிடித்தல், செல்லப்பெயர் கூறி அழைத்தல், நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறுதல், முத்தமிடல் ஆகியன தனது இணையிடம் அன்பை வெளிப்படுத்த பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் வழிமுறைகளாம்.
தகவல் பரிமாற்றம் உறவை வலுப்படுத்துவதாகவும், இது குறையும் வேளையில் உறவு சீர்குலைவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment