சென்னையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்.
நான் சவால் விட்டேன். கவர்னர் ஆட்சியை வைத்துவிட்டு, தேர்தலை சந்திக்க தயார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், தாம் உள்பட தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டு, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயார். என் மீதான நடவடிக்கையை கண்டித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் பிரச்சனையைப் பற்றி பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், மக்கள் பிரச்சனையை பேசுவதற்காக தேமுதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்வார்கள். சட்டசபை நிகழ்ச்சிகளை தூர்தர்சனில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக தொண்டர்களின் விருப்பத்திற்காகவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். சட்டமன்ற தேர்தலில் எங்கள் ஆதரவால்தான் அதிமுக வெற்றி பெற முடிந்தது.
அவுங்க (ஜெ) சொல்றாங்க தகுதியில்லை என்று (முதலில் அவருக்கு உண்டா). தகுதியில்லாத கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறோம். 2004ல் ஒரு நாடாளுமன்ற சீட் கூட வரவிலலை. இவங்க கூட கூட்டணி வைச்சதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். இவங்க வந்து தேடுனாங்க. எப்படி எப்படி கெஞ்சினாங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. நன்றி கெட்டவங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. எப்படி கெஞ்சினாங்க என்பது எனக்கு தெரியும். பேசனும் நினைத்தால் நிறைய பேசுவேன். பேசக்கூடாது என்பதற்காக அடக்கிபோகிறேன். இன்னைக்கு மந்திரியா, எம்எல்ஏவாக இருக்கிறவங்க எத்தனைபேர் கெஞ்சினாங்க., எங்கள் காலை பிடிக்காத குறையாக கெஞ்சினார்கள் சொல்லத்தெரியாதா எங்களுக்கு.
அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஜெயலலிதாவுக்கு ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யார் ஏறு முகம், யார் இறங்குமுகம் என்பது மக்கள் வாக்களிக்கும்போது தெரியும். தற்போது சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு சவால்விடும் அதிமுக, கடந்த ஆட்சியில் ஒரு இடைத்தேர்தலில் கூட வெற்றிப் பெறவில்லை. பென்னாகரத்தில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது என்றார்.
0 comments :
Post a Comment