கொழும்பு, பிப் 27: இலங்கையில் ராணுவ தாக்குதலுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதால் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து குடியுரிமை பெறாதவர்களை அந்த நாடுகள் இலங்கைக்கு திருப்பு அனுப்பி வருகின்றனர்.
அப்படி இலங்கைக்கு திரும்பி வருபவர்கள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்படுவதாகவும், பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் புகார் கூறியுள்ளது. ஆடைகளை அகற்றியும், சிகரெட்டால் சுட்டும் சித்ரவதை செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதேபோல தமிழ் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது. எனவே வெளிநாடுகள் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இங்கிலாந்தில் இருந்து ஒரு குழுவை விரைவில் திருப்பி அனுப்புவதாக இருந்தது. அவர்களையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று மனித உரிமை அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment