மெல்போர்ன்: முத்தரப்பு தொடரில் இன்று இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. உலக கோப்பை பைனலுக்குப் பின் இரு அணிகள் மோதும் போட்டி என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இன்று மெல்போர்னில் நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, ஜெயவர்தனா தலைமையிலான இலங்கை அணியை சந்திக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் நீக்கப்பட்ட சேவக், இன்று களமிறங்குகிறார். உலக கோப்பை தொடருக்குப் பின் அணிக்கு திரும்பிய சச்சினின், 100வது சதம் அடிக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. காம்பிர் பின்தள்ளப்படுவார். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா இடம் உறுதி. ரோகித் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். கேப்டன் தோனி நிலைத்து நின்று ஆட வேண்டும்.
டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஜாகிர் இன்று அணிக்கு திரும்பலாம். பிரவீண் குமாருடன், கடந்த போட்டியில் அசத்திய வினய் குமார் மீண்டும் ஜொலிக்க முயற்சிக்க வேண்டும். ஆடுகளம் வேகத்துக்கு சாதகமானது என்பதால் சுழற்பந்து வீச்சாளர் இடத்தை ராகுல் சர்மா தட்டிச் செல்வார் என்று தெரிகிறது. இதனால் இன்று அஷ்வின் அல்லது , "ஆல் ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு கிடைக்கலாம்.
கடந்த 2008 தொடரில் பெர்த் டெஸ்டில் இர்பான் பதான் அசத்தி இருந்ததால், இன்று ஒருவேளை களமிறங்கலாம். இது தோனி கையில் தான் உள்ளது.
0 comments :
Post a Comment