Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 17, 2012

மத வாத இயக்கமல்ல! தீவிரவாத இயக்கம்!! யெச்சூரி!?

புது தில்லி: ஆர்எஸ்எஸ் இயக்கமானது மதவாத இயக்கம் மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகி யுள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த செüகான், நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். இந்த அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

2008-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மாலேகாவ்னில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், ஹைதராபாத்தில் மெக்கா மஸ்ஜித்தில் 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் மற்றும் ஆஜ்மீர் தர்காவில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியாவில் பரவிவரும் ஹிந்துத்வா பயங்கரவாதம் வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது என்று யெச்சூரி கூறினார். பயங்கரவாதத்துக்கு ஜாதி,மத பேதம் இல்லை என்பது புலனாகியுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்புகள் மேற்கொள்ள விருந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றிய தகவல் வெளியானது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரவாதத் தன்மை, நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது குறைத்துக் காட்டப்பட்டது. நாட்டின் முக்கியப் பிரச்னைகள் கிடப்பில் போட்டப்பட்டன. தங்களது அரசு 5 ஆண்டுக்காலம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை போல நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையான காலத்தில் பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நான்டெட், பார்பானி, ஜால்னா, ஜலேகாவ்ன் ஆகிய பகுதிகளிலும் உத்தரப் பிரதேச த்தில் மாவ் மற்றும் கான்பூரிலும், தமிழகத்தில் தென்காசியிலும் வழக்குகள் பாரபட்சமாக நடந்துள்ளன.

இத்தகைய மதவாத அமைப்புகளின் செயல்பாடுகளை சகித்துக்கொள்ளும் போக்கு ஏற்புடையதல்ல. தங்களது இயக்கத்தில் சிலரது செயல்பாடுகள் இயக்கக் கொள்கையிலிருந்து சற்று விலகிச் செல்வதாக ஆர்எஸ்எஸ் குறிப்பிடுகிறது. அதற்காக ஒட்டுமொத்த இயக்கத்தைக் குறைகூறாதீர்கள் என்றும் வலியுறுத்துகிறது.

ஆனால் இவ்விதம் கூறுவதில் அர்த்தமில்லை. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனரான டாக்டர் ஹெக்டேவாருக்கு முன்னு தாரணாக விளங்கியவர் பி.எஸ் மூன்ஞ்சே. இவர் இத்தாலிக்கு சென்று பாசிச சர்வாதிகாரி முசோலினியை 1931-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். மூன்ஞ்சே தனது டைரியில், மார்ச் 20-ம் தேதி எழுதிய விவரத்தில், பாசிச இயக்கத்தால் தான் ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் படையை உருவாக்குவதன் மூலம் இதை சாத்தியமாக்கமுடியும் என்ற முசோலினியின் கருத்தை அவர் ஏற்றார். இதையடுத்து நாடு திரும்பிய அவர் நாசிக்கில் 1935-ம் ஆண்டு மத்திய ஹிந்து ராணுவ கல்வி மையத்தை தொடங்கினார். இந்த மையம்தான் இப்போது ஹிந்துத்வா தீவிரவாத பயிற்சி மையமாக மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மதச்சார்பற்ற நாடாக திகழும் இந்தியாவை, ஹிந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக உள்ளது என்று யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும் என்று கம்யூனிச தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!