மும்பை, பிப். 16: இந்தியாவில் சொத்துகளை வாங்கும்போது அது தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாக்கல் செய்யத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கும் இது பொருந்தும்.
வெளிநாட்டினர் இந்தியாவில் அசையாச் சொத்துகளை வாங்கும்போது, அது தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை 90 நாள்களுக்குள் ரிசர்வ் வங்கியிடம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாடுவாழ் இந்தியருக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்துமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. இதைப் போக்கும் வகையிலேயே ரிசர்வ் வங்கி இப்போது விளக்கம் அளித்திருக்கிறது.
0 comments :
Post a Comment