புதுடெல்லி: 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று புதுடெல்லியில் நடைபெற்ற தகுதிச்சுற்று இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை 8-1 என தோற்கடித்ததன் மூலம் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைத்துள்ளது இந்திய அணி.
கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது., இன்றைய போட்டியில் சந்தீப் சிங் 5 கோல்கள் அடித்தார். இதன் மூலம் இத்தொடரில் அவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
8 முறை ஒலிம்பிக் சாம்பியனாக முடிசூடியுள்ள இந்திய ஹாக்கி அணி, இடையே திடீர் வீழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இப்போட்டிகளுக்கு தகுதி பெற்றிருப்பது இந்திய ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. எனினும் நேற்று மகளிருக்கான தகுதி சுற்று இறுதி போட்டியில் இந்திய அணி தெ.ஆபிரிக்கவிடம் தோற்றதன் மூலம் ஒலிம்பிக்கில் நுழையும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment