பணம் பத்தும் செய்யும்' என்பது, "பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்,' என, மாறியது. நாளடைவில் அதுவே, "பணத்திற்காக எதையும் செய்யலாம்,' என்ற நிலைக்கு மாறிவிட்டது.
சமூகத்திற்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும், பணத்தை சார்ந்தே உள்ளது. அடுத்த தலைமுறையாவது, இதிலிருந்து விடுபட வேண்டும் என்பதே, பலரின் எதிர்பார்ப்பு. அதற்கும் வேட்டு வைக்க களமிறங்கிவிட்டன "ரூபாய் நோட்டு விளையாட்டு'.
முன்பெல்லாம் காகிதத்தால் ஆன "டம்மி ரூபாய் நோட்டுகள்' குழந்தைகளுக்காக விற்பனைக்கு வரும். அவை சிறிதாக இருக்கும் என்பதால், "டம்மி' என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். தற்போது விற்பனைக்கு வருபவை, பளபளக்கும் தாளில், அச்சு அசல் ஒரிஜினல் ரூபாய் நோட்டு போல உள்ளன. மூன்று நோட்டுகளின் விலை ஒரு ரூபாய். இதை வைத்து, சிறுவர்கள் பலரும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகின்றனர். சில குழந்தைகள் சேமிப்பு குறித்து விளையாடுவது ஆரோக்கியம் தான்.
அதே நேரத்தில், ஆள் கடத்துதல், கொலை, கொள்ளையடிப்பது போன்ற விளையாட்டுகள் தான், இதை வைத்து பிரதானமாக நடக்கிறது. தன் குழந்தைகளை குதூகலப்படுத்துவதாக நினைத்து, டம்மி ரூபாய் நோட்டுகளை பெற்றோர் வாங்கித்தருகின்றனர். பின்னணியில் நடக்கும் விபரீத விளையாட்டுகளை அவர்கள் அறிவதில்லை. சினிமாவும், "டிவி'யும் தன் பங்கிற்கு சமூக சீரழிவை ஊக்குவித்து வரும் நிலையில், இது போன்ற விளையாட்டுகள் அடுத்த தலைமுறைக்கு சவாலாக அமையலாம்.
0 comments :
Post a Comment