Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, February 3, 2013

மனிதர்கள் விற்பனைக்கு!?

பாங்காக்: புத்த தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அபயம் தேடி தாய்லாந்து நாட்டிற்கு செல்லும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விற்பனைச் செய்யப்படும் கொடூரம் நடந்துவருகிறது. ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் படகுகள் மூலமாக அந்தமான் தீவு வழியாக அபயம் தேடி மலேசியாவுக்கு செல்கின்றனர். ஆனால், தாய்லாந்து கடற்படையும், போலீசும் சேர்ந்து படகுகளை தடுத்து நிறுத்தி அகதிகளை விற்பனைச் செய்வதாக பி.பி.சி கூறுகிறது.

கலவரத்தின்போது மீன்பிடி படகை இழந்த ரோஹிங்கியா முஸ்லிமான அஹ்மதின் கதையை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அஹ்மத் மற்றும் 60 நபர்களை கரையில் இருந்து அவ்வளவு தொலைவு இல்லாத இடத்தில் வைத்து கடற்படை கைது செய்துள்ளது. எல்லோரையும் பிடித்து கட்டிய பிறகு போலீஸ் வேனில் தாய்லாந்து-மலேசியா எல்லையில் உள்ள கடத்தல்காரர்களின் முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஒடுங்கிய இடத்தில் தங்குமிடம். உணவு, தூக்கம் எல்லாம் இங்கேதான். போலீசாருக்கு பணத்தைக் கொடுத்து ஆட்களை வாங்கியதாகவும், அவ்வளவு பணத்தையும் திரும்ப அளித்தால் அவர்களை விடுவிப்பதாகவும் கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு 1300 டாலர் விலை நிர்ணயித்தார்கள் என்று அஹ்மத் கூறுகிறார். ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஒரு குழுவினர் அங்கு வந்து கடத்தல்காரர்களிடமிருந்து அஹ்மத் உள்ளிட்டோரை மீட்டுள்ளனர்.

இச்செய்திக் குறித்து பதிலளித்துள்ள தாய்லாந்து அரசு இதுக்குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. உயர் ரேங்கில் உள்ள தாய்லாந்து ராணுவ அதிகாரி மற்றும் கர்னலை விசாரணை தொடர்பாக சஸ்பெண்ட் செய்துள்ளது அரசு. தெற்கு தாய்லாந்து மாகாணமான சுங்கலாவில் போலீஸ் சோதனை போட்டது. அப்பொழுது 800க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கட்டிடத்தில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மனித கடத்தலுக்கு துணைபோன உயர் அரசியல் கட்சியின் தலைவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் நடத்திய கூட்டுப்படுகொலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!