Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, February 18, 2013

விஷரூபம் மானமா! அவமானமா!?

உலக நாயகன் என்று தனக்கு தானே பெயர் சூடிக்கொண்ட கமல் உண்மையில் இவர் உலக நாயகன்தானா உலக அளவில் இவர் பெயர் பெற்றாரா? உலக பெயர் பெற, உலகப்பெயர் பெற்ற ஆஸ்கர் விருது தனக்கு கிடைக்க சினிமாவில் சம்பாதித்த பொருள் அனைத்தையும் விஷரூபத்திற்காக சிலவு செய்ததாக கூறுகிறார். அதிலும் தமிழகத்தில் திரையிட தடை ஏற்பட்டதால் இது தேசிய அவமானம் ஹிந்துத்துவவாதிகள் கூறுகிறார்கள்.

இது தேசிய அவமானமில்லையா? 'தமிழனால் தயாரிக்கப்பட்டு, தமிழனால் உருவாக்கப்பட்டு, தமிழனால் நடிக்கப்பட்ட தமிழ் படம், தமிழ்நாட்டில் திரையிட முடியாத நிலை உள்ளது, தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் ஆகும்.'' இந்த உலகமாக கருத்தை சொன்னவர் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அத்வானிக்கு செலக்டிவ் அம்னீசியா நோய் உள்ளாதோ என்று முன்பொருமுறை கேட்டார் ஜெயலலிதா. அத்வானி மட்டுமல்ல. காவிக் கட்சியினர் எல்லோரும் அந்த நோயால் பீடிக்கப் பட்டுல்லார்களோ என சந்தேகிக்கும் வண்ணன் அவர்களின் பேச்சும் செயலும் அமைகின்றது. கமலுக்கு வக்காலத்து வாங்கி கருத்து பேசும் இந்த பொன்னார், இவரது சகா பால்தாக்கரேயின் கட்சியினர் இரு ஆண்டுகளுக்கு முன்னால ஷாரூக் கானின் ''மை நேம் ஈஸ் கான்'' படத்திற்கு எதிராக ஆடிய ஆட்டமென்ன?

@_இதுபற்றிய அப்போதைய செய்தி:..? (Flash Back)

'சிவசேனா நடத்தி வரும் வன்முறை போராட்டங்கள் காரணமாக, ஷாரூக்கானின் மெகா பட்ஜட் படைப்பான மை நேம் ஈஸ் கான் திரைப்படத்தை மும்பையில் எந்தத் திரையரங்கிலும் வெளியிடுவதில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் முதல்கட்டமாக முடிவு செய்துள்ளனர். எனினும் இன்று இறுதி முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இது பற்றி கருத்து தெரிவித்த இந்தி நடிகர் ஷாரூக் கான் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்க வேண்டும் என்றார். இதே கருத்தை நடிகர் அமீர்கானும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஷாரூக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறினார். ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஷாரூக் கான் உறுதியாக நின்றார். இதையடுத்து ஷாரூக் கானுக்கு எதிராக சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.

ஷாரூக்கான் படம் எதையும் மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் சிவசேனா கட்சியினர் மிரட்டி வருகின்றனர். இந் நிலையில் ஷாரூக் கான் நடித்துள்ள மை நேம் இஸ் கான் படம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 63 தியேட்டர்களில் இந்தபடம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா கட்சி மிரட்டல் விடுத்தது. மை நேம் இஸ்கான் படம் திரையிட உள்ள தியேட்டர்களை சிவசேனா தொண்டர்கள் சூறையாடினார்கள். இதனால் பயந்துபோன தியேட்டர் உரிமையாளர்கள், ஷாரூக் கான் படத்தை வெளியிட தயக்கம் காட்டினார்கள். ஷாரூக் கான் படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று மராட்டிய மாநில முதலவர்அசோக் சவான் அறிவித்தார். அவரது உத்தரவின் பேரில் மை நேரம் இஸ் கான் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மை நேம் இஸ் கான் படத்தின் வினியோக உரிமையை வாங்கியுள்ள பாக்ஸ் ஸ்டார் டிஸ்டிரிபியூசன் செயல் இயக்குனர் விஜய்சிங் கூறுகையில், மை நேம் இஸ்கான் படம் நாடெங்கும் வெள்ளிக்கிழமை திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என்றார். என்றாலும் தியேட்டர்காரர்கள் மை நேம் இஸ் கான் படத்தை திரையிட முன்வரவில்லை. மும்பையில் பெரும்பாலான தியேட்டர்களில் இன்று அந்த படம் வெளியாகவில்லை. மை நேம் இஸ் கான் படத்தை வெளியிடுவது குறித்து மும்பை தியேட்டர் உரிமையாளர்கள் நேற்றிரவு 2 தடவை கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஷாரூக் கான் படத்தை வெள்ளிக்கிழமை திரையிட வேண்டாம் என்று தீர்மானித்தனர். இன்று மீண்டும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஷாரூக்கான் படத்தை வெளியிடுவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

டெல்லி, குஜராத், ஒரிஸ்ஸாவிலும் எதிர்ப்பு!: மை நேம் ஈஸ் கான் படத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் ஓட விடாமல் செய்ய வேண்டும் என்பதில் சிவசேனா தீவிரமாக உள்ளது. இதற்கு பஜ்ரங் தள் அமைப்பும் முழு ஆதரவு கொடுத்து வருகிறது. ஒரிஸா, குஜராத்தில் இந்தப் படத்தை ரிலீஸாக விடமாட்டோம் என பஜ்ரங் தள் அறிவித்துள்ளது. டெல்லியில் இந்தப் படம் திரையிடப்பட்ட சத்யம் திரையரங்கை சிவசேனா, பஜ்ரங் தள் தொண்டர்கள் சூறையாடினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, படம் பார்க்க வந்திருந்த மக்கள் பதறியடித்தபடி ஓடினர். தியேட்டர் கண்ணாடிகள், இருக்கைகள், ஏசி இயந்திரம் என அடித்து நொறுக்கப்பட்டன.

மிஸ்டர் காவி நாயகன், மத நல்லினக்கத்தை கெடுக்கும் வகையில் எடுத்த படத்தை சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய பொறுப்பிலுள்ள தமிழக அரசு தடை செய்தது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்றால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று ஜனநாயகம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் அடிப்படையில் கருத்து சொன்ன ஷாரூக்கான் படத்திற்கு எதிராக உங்கள் வகையறாக்கள் வெறியாட்டம் ஆடியது தேசிய அவமானமில்லையா?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!