Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 15, 2013

இது காதலா காமமா!?

காதலர் தினமாம். அண்மைக் காலமாக இந்தியாவெங்கும் இளம் பருவத்தினர் இத்தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டும் பல நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 
‘காதல் சாத்தியமானதே’ என்ற முழக்கத்துடன் அறிவுஜீவிகளும், பெண்ணீயவாதிகளும், உரிமைகளுக்காக முழக்கமிடும் சில அமைப்புகளும் காதலர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர்.
காதலர் தின அன்பு பரிசுகளுடன் சந்தையும் தீவிரமாக இயங்கி வருகிறது. இத்தகையதொரு அனுகூலமான சூழலில் பருவமடையாத பதின்பருவ பெண்கள் கூட காதல் ஜுரத்தில் சிக்குவதில் அதிசயம் ஒன்றுமில்லை. காதலிப்பது எப்படி? என்று பல்வேறு தனியார் ரேடியோக்களும் பாடம் நடத்துகின்றன.
பரஸ்பரம் புரிந்துகொள்ளும் விழிப்புணர்வு கொண்ட ஆணும், பெண்ணும் காதலிப்பதை குற்றப்படுத்த முடியாது என்று கூறலாம். சில வேளைகளில் சில காதல்கள் வெற்றிப் பெற்றிருக்கலாம். ஆனால், பதின் பருவத்திற்கும், இளம்பருவத்திற்கும் இடைப்பட்ட பல பெண்களின் நிலை அதுவல்ல.செக்ஸ் வியாபாரிகள் வலை வீசி காத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் நிகழும் அசம்பாவிதங்களும், கூட்டு பாலியல் வன்புணர்வுகளும் வழக்கமான செய்திகளின் அந்தஸ்தை கூட இழந்துவிட்டன.
மொபைல் ஃபோனும், இணையதளமும் பெரும்பாலும் அப்பாவி இளம் பருவ பெண்களை காமுகர்களின் சதி வலையில் சிக்கவைக்கின்றன. இவற்றை எதிர்ப்பவர்கள் பழமைவாதிகளாக முத்திரைக் குத்தப்படுகின்றார்கள்.
எல்லாம் சம்பவித்த பிறகு கவலைப்பட்டு என்ன பயன்? சொந்த தந்தையையும், சகோதரனையும் கூட நம்பமுடியாத காலம். வழி தவறும் இளம் பருவ பெண்களை யார் பாதுகாக்கப் போகின்றார்கள்?(ஒன்று மட்டும் நிச்சயம் தொடக்கம் காதலாக இருக்கும் ஆனால் முடிவு காமம் காமம் காமம்)Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!