Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 1, 2013

பாலியலுக்கு பக்காவான டிஷ்!!

உலக முழுவதும் நடக்கும் பாலியல் பலாத்காரத்திற்கு காரணம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும்., அது என்ன வென்றால் போதை. தற்போது நடந்துள்ள டெல்லி சம்பவத்தையும் சேர்த்து.

மது பழக்கத்தால் சமூகத்தில் தலைகுனிவு ஏற்படுவதுடன் உடல் நலமும் சீர்கேடு அடைகிறது அதிகப்படியான ஆல்கஹால் போதையால் இளைஞர்களின் உணர்ச்சிகளை மிக வேகமாக தூண்டி விட்டு வெறி கொள்ளச் செய்கிறது.

பொதுவாக ஆண்களுக்கு உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சியை அடக்கிக் கொள்ளலாம். வெறியை அடக்க முடியாது. இந்த வெறியானது மது போதையால் வரக்கூடியது. ஒருவன் அதிகப்படியான மது போதையால் திடீரென உணர்ச்சியால் உந்தப்பட்டு கண்ணில் பார்க்க கூடியதை அடைய வெறி கொள்கிறான். இதற்காக அவனை வன்முறையில் ஈடுபடவும் தூண்டுகிறது. வெறிக்கும், ஆண்மைக்கும் வேறுபாடு உண்டு.

ஆண்மை இருப்பவன்தான் கற்பழிப்பில் ஈடுபடுகிறான் என்பது அல்ல. ஆண்மை எல்லோருக்கும் உண்டு. வெறிதான் ஒருவனை மிருகமாக்குகிறது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வெறி பிடித்தவர்கள். அவர்களுக்கு மது போதை மற்றும் உணர்ச்சிகளை தூண்டும் செயல்கள்தான் வெறியைத் தூண்டுகிறது.

இது போன்ற மது போதை வெறியால் அவன் பார்க்கும் பெண்ணை அடையும் வெறி ஏற்பட்டு, அதற்கு தடையாக இருக்கும் போது அவர்களை தாக்கி பணிய வைக்கிறான். டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவமும் இந்த வெறியால் நடந்ததற்கு எடுத்துக்காட்டு. பிறகு அவன் தவறை உணர்ந்து செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறான்.

அவனுக்கு தூக்கம் வராது. நாளடைவில் மனநிலை பாதிக்கப்பட்டு சைக்கோ நிலையை அடைந்து விடுகிறான். உடலில்நீர் பற்றாக்குறை, மயக்க நிலை, உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் போவது போன்ற ஏராளமான பிரச்சினைகள் மதுவில் முக்கியமாக உள்ளன. எத்தனால் என்ற வேதிப் பொருள்தான் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம். மது முதலில் உடலில் தாக்குவது நரம்பு மண்டலத்தைத் தான்.

அதன்பிறகு ஒவ்வொரு முக்கிய உறுப்பாகத் தாக்கி ஒட்டு மொத்த உடல் உறுப்புகளையும் செயல் இழக்கச் செய்யும். மதுவினால் உடலின் மிகப்பெரிய சுரப்பியான சுமார் 1 கிலோ எடையுள்ள கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இது 500 விதமான வேதியியல் மாற்றங்களை ஒரே நேரத்தில் செய்கிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து விடும்.

மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட சிலர் தவிர்க்க முடியாமல் விருப்பத்திற்கு மாறாக, போதும் என்று கட்டப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடித்து, அந்த பழக்கத்தை விட முடியாமல் இருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத் துறையினரால் குணப்படுத்த முடியும் நோயாக வரையறுக்கப்படுகிறது.

இதுபோல் தான் கஞ்சா, அபின், பிரவுன்சுகர், புகை யிலை பழக்கங்களும் இவையும் ஹார்மோன் குறைபாடுகள், நரம்பு தளர்ச்சி, நரம்பில் உள்ள நியூட்ரான் செல்களின் குறைபாடு, நரம்பு இயக்க சக்தியின்மை, ஆண்மை குறைவு போன்ற குறைபாடுகளை உண்டு பண்ணுகிறது. கடைசியில் இதனால் மன வேதனைப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

வட இந்தியாவில் போதையால் நடைபெறும் குற்றங்கள் அதிகம். பான்பராக், புகையிலை பழக்கத்தால் வாய்ப்புற்று நோய் வர வாய்ப்புள்ளது. இதற்கு ஒரே தீர்வு இளைஞர்களை மது போதையில் இருந்து விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்துவது தான் ஒரே வழி. இதுபோன்ற தீய பழக்கத்தை விட்டுவிட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் உங்கள் உடலுக்கும் நண்மை பயக்கும். புது மனிதனாக புத்துயிர் பெறலாம்.

Reactions:

1 comments :

evan kekka poran. nalla pathivu. ithai padithalavathu nan thiruntha vendum. ellame theriyuthu. vida mudiyala.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!