புதுடெல்லி: பாராளுமன்ற தாக்குதலில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றம் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்குத் தண்டனை விதித்த அப்ஸல் குருவின் கருணை மனுவை நிராகரித்ததோடு மரணத்தண்டனையை உறுதிச் செய்ய கையெழுத்திட்ட பிரணாப் முகர்ஜி கடந்த 15 வருடங்களில் விரைவான நடவடிக்கை மேற்கொண்ட குடியரசு தலைவராக கருதப்படுகிறார்.
அப்ஸல் குருவின் மரணத்தண்டனைக்கு ஒப்புதல் அளிக்க கையெழுத்திடும் முன்பு அஜ்மல் கஸாப் (2012 நவம்பர் 5) மற்றும் ஸய்பன்னா நிஞ்சப்பா (2013 ஜனவரி 4) ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை உறுதிச் செய்தார்.
சொத்து தகராறில் குடும்பத்தில் 3 நபர்களை கொலைச் செய்த அல் பீருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையில் கருணை மனுவை ஏற்றுக்கொண்டார் பிரணாப்.
முன்னாள் குடியரசு தலைவர்களான பிரதீபா பாட்டீல், ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கே.ஆர்.நாராயணன் ஆகியோர் பிரணாபிடமிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை கையாண்டனர். கே.ஆர்.நாராயணன் தன்னிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் எதனையும் தள்ளுபடிச் செய்யவில்லை. பிரதீபா பாட்டீலிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் நான்கு பாலியல் பலாத்கார கொலையாளிகள் உள்பட 34 பேர் இடம் பெற்றிருந்தனர்.
தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை பிரதீபா பாட்டீல் பரிசீலிக்கவில்லை. கார் குண்டு வெடிப்பின் மூலம் ஒன்பது பேரை கொலைச் செய்த குற்றவாளி தேவீந்தர் சிங் புல்லார், கொலைக் குற்றவாளி மஹேந்திரநாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்கள் தள்ளுபடிச் செய்யப்பட்டன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கும், புல்லாரின் வழக்கும் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலைச் செய்த வழக்கில் குற்றவாளியான தனஞ்செய் சாட்டர்ஜியின் கருணை மனுவை அப்துல் கலாம் நிராகரித்தார்., சங்கர் தயாள் சர்மாவின் முன்னால் வந்த 14 கருணை மனுக்களும் தள்ளுபடிச் செய்யப்பட்டன.
மனித ஆர்வலர் கூறும்போது: இந்தியா தவறான முன்னுதாரமாகவும், உலக நாடுகளின் அவப்பெயரையும் சம்பாதித்துகொண்டுள்ளது ஏனென்றால் மரண தண்டனைக்கு எதிராக ஐ நா வில் இந்தியா கையெலுத்திட்டுள்ளது குறுப்பிடத்தக்கது என்றார்.
0 comments :
Post a Comment