Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, November 9, 2012

மத சார்பற்ற நாட்டில் அடையாளங்களை இழக்கும் சிறுபான்மையினர்?

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் வேலைக்காக பெயரையும், அடையாளத்தையும் மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது.

ஆயாக்களாக வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்கள் தங்களது முஸ்லிம் அடையாளத்தை மறைத்துவிட்டு பணிக்கு செல்கின்றனர். கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சுமி என்ற பெயரில் நர்ஸாக வேலைப்பார்க்கும் 32 வயதான ஹஸீனா பேகம் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்.

”அண்மையில் நான் வேலைப் பார்த்த மருத்துவமனையில் வேலைத்தேடி சில பெண்கள் வந்தனர். ஆனால், ஒரு முஸ்லிம் பெண்ணையும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகிகள் என்னிடம் கூறினர். அதே வேளையில் நான் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்தால் ஏற்படும் பின்விளைவுகள் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும்” என்ற அஞ்சுகிறார் ஹஸீனா பேகம்.

கீழ் மட்ட வேலைகளை பார்க்கும் முஸ்லிம் பெண்கள் தாம் தங்களது பெயரை இந்து பெயராக மாற்றுகின்றனர். இத்தகைய துறைகளில் பணியாளர்களின் அடையாள அட்டை கோரப்படாதது இவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. வேலைக்காக முஸ்லிம்களை ஹிந்துக்களாக மாற்றும் (ஹிந்து பெயர்களை சூட்டும்) ஏராளமான ரிக்ரூட் மெண்ட் ஏஜன்சிகள் கொல்கத்தாவில் இயங்குவதாக ஹவுஸ்மெய்ட் ஏஜன்சியை நடத்தி வரும் பரீன் கோஷ் கூறுகிறார்.

இந்திய வேலை வாய்ப்புத் துறையில் நிலவும் அபாயகரமான சமூக பாரபட்சம்தான் பரீன் கோஷின் வார்த்தைகள் மூலம் நிரூபணமாவதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது. முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இயலவில்லை என்பது வேலைவாய்ப்புத் துறையில் நிலவும் சமூக பாரட்சம் நிரூபிப்பதாக சிறுபான்மை உரிமை ஆர்வலரான ஆயிஷா பர்வேஷ் கூறுகிறார். அமைப்பு சாரா தொழில் துறைகளில் மட்டுமல்ல, அரசுத்துறைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாக ஆயிஷா கூறுகிறார். முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக இந்துக்கள் கருதுவதாக மேகாலாயாவில் நார்த் ஈஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஃபிலாஸஃபி பேராசிரியரான பிரசஞ்சித் பிஸ்வாஸ் கூறுகிறார்.

சமூக-பொருளாதார – கல்வித் துறைகளில் முஸ்லிம்கள் தலித்துகளை விட மோசமான நிலையில் இருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கையை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது., மனித உரிமை ஆர்வலர் கூறும்போது: இநதியா மத சார்பற்ற நாடு என்று சொல்லவே வெக்கப்படுகிறேன் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!