த்ரிஷா சினிமாவில் நடிகையாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டன. என்றபோதும் அவரது பெயரைச்சொல்லும்படியான படங்கள் எதுவும் இல்லை என்பதுதான் அவரது இப்போதைய வருத்தமே.
இதுவரையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதிலேயே கவனத்தை பதித்திருந்தவர், இப்போது போதும போதும் என்கிற அளவுக்கு பணத்தை குவித்து விட்டதால், அடுத்தபடியாக கொஞ்சமாவது புகழை சம்பாதித்து தரும் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் தனது ஆர்வத்தை திருப்பியிருக்கிறார்.
தற்போது கைவசம் சமர், என்றென்றும் காதல், பூலோகம் போன்ற படங்களை வைத்திருந்தாலும் இப்படங்களில் பேச வைக்கக்கூடிய கதாபாத்திரங்கள் தனக்கு இல்லை என்பதால், அடுத்தபடியாக வித்தியாசமான படங்களில் நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். குறிப்பாக, அருந்ததி படத்தில் அனுஷ்கா நடித்தது போன்று அதிரடியான வேடங்கள், கதாநாயகியை சுற்றி பின்னப்படும் கதைகளில் நடிக்க வேண்டுமென்றுதுடித்துக்கொண்டிருக்கிறார்.
அதனால் இதுவரை படத்துக்குப்படம் லட்சங்களை உயர்த்துவதிலேயே மும்முரமாக இருந்த த்ரிஷா, தான் எதிர்பார்ப்பது போன்ற கதைகள் கிடைத்தால் சம்பளத்தில் 20 சதவிகிதம் தள்ளுபடி செய்யவும் முடிவெடுத்திருக்கிறார்.



1 comments :
இது ஒரு நல்ல முடிவு.....பாராட்டுக்கள்.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment