Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, November 26, 2012

இந்தி(யா)ர்களுக்கு தலை குனிவு!!?

பாசிசம்,. இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர். சிவசேனா தலைவர் பால் தக்கரே இறுதி ஊர்வலத்தின் போது அவர் மீது இந்தியதேசியக்கொடி போர்த்த பட்டிருந்தது.

ஒருமுறை கூட தேர்தலில் நிற்காத எந்த போரையே பார்க்காத அரசருக்கு எதற்கு அரசு மரியாதை? மூன்று வண்ணங்களில் இந்திய தேசியக்கொடியை காவி வண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ற அவருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?

எல்லோரும் நினைப்பது போல் இந்த தாக்கரே ஒரு தேசிய தலைவரோ அல்லது நாட்டுக்காக தியாகங்கள் செய்து பலமுறை சிறை சென்றவரோ அல்ல. தனது ரௌடித்தனத்தால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரு 'முன்னாள் தாதா'தான் இந்த பால் தாக்கரே. இவர் குறிவைத்ததெல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து பிழைக்க வந்த சாதாரண ஏழைத் தொழிலாளிகளும், தாழ்த்தப்பட்டவர்களும்தான்.

தமிழ்நாட்டில் இந்துமுன்னணி ராமகோபாலன் தமிழ்த் தேசியம் பேச ஆரம்பித்து அதையே தன் வேலைத்திட்டமாக வைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான மராட்டிய வடிவம் தான் தாக்ரே.

நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திர்காக பாடுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் மட்டும் கிடைக்கும் கவுரவம் இந்த இறுதி மரியாதை...ஆனால் பால் தக்கரே போன்ற கொலைகாரர்களுக்கு ஏன் இந்த மரியாதை..

இவர் என்ன...?

1. ஜனாதிபதியா..

2. முதலமைச்சரா..

3. நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரரா..

4. சமூக வளர்ச்சிகாக போராடியவரா..

உண்மையை சொல்ல போனால்..மேலே குறிப்பிட்டுல்ல அனைத்திற்கும் எதிரானவர்..அவர் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?

1. 1999-ல் தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் நிற்கவும் ஓட்டுப்போட தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர்.

2. 1992 -ல் நடந்த மிகப்பெரிய கலவரத்தின் சூத்திரதாரி.

3. சிவசேனை என்ற பெயரில் உள்நாட்டு கலவரத்தை நடத்த கலவரப்படை உருவாக்கியவர்.

4. 2002 -ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்தவர்.

5. தென் இந்தியர்கள் மகாராஸ்டிர மாநிலத்தில் இருக்ககூடாது என்று அறிவிப்பு விட்டவர்.

6. சிவசேனை படையை கொண்டு வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்.

இந்திய நாட்டில் இஸ்லாமியர்கலும் கிறிஸ்தவர்களும் புற்று நோய் போன்றவர்கள் அவர்களை அழிக்கும் வரை ஓயகூடது என்று கூரியவர். இந்திய தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களில் காவி வண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ர அ(யோக்கியன்)வருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?

நாட்டில் பிரிவினையை கொண்டுவந்து நாட்டின் அமைதியை குலைத்து, பலரின் உயிரை பறித்த இவருக்கு ஏன் தேசிய மரியாதை?

தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்த இவர் தீவிரவாதி இல்லையா?

மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த இவரும், நாட்டு மக்களுக்காக எல்லையில் உயிர் விட்ட மாபெரும் வீரர்களும் சமமா?

அறிவுல்லவர்கள் பதில் சொல்லவும்......?மொத்தத்தில் இந்தியாவை உடைக்க நினைத்த ஒரு ஹிந்துத்துவா தீவிரவாத சிந்தனையில் வாழ்ந்த ஒருவருக்கு இந்திய தேசிய கொடியை உடலில் மேல் போற்றி நாட்டுக்கே களங்கம் உண்டாகி விட்டார்கள். ஓட்டு பிச்சை எடுக்கும் அரசியல் அறக்கர்கள்.

3 comments :

நம் இந்திய கொடியை அவர் மேல் போட்டவர்களுக்கு முதலில் மிக மிக கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்....இது தேச துரோகிகள் செய்யும் செயலை விட மிக கொடுமையான ஒரு விஷயம்......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மும்பையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொலைசெய்தது மட்டுமில்லாமல் தன்னுடைய "சாம்னா"என்ற பத்திரிக்கையில் முஸ்லீம் களை பற்றியும் வட இந்தியர்களை பற்றியும் தினம்,தினம் நச்சுக்கருத்துக்களை பரப்பிவந்தவன் கொடுங்கோலன் தாக்கரே.

எத்தனையோ வழக்குகள் அவன் மீது இருந்தும் அவன் தானாக சாகும் வரை அவனுடைய முடியைக்கூட அசைக்க இவனுங்களுக்கு வக்கில்லை.ஆனால் ஒரு தனிமனிதன் இறந்ததிர்க்கு ஏன் முழு கடையடைப்பு செய்யவேண்டும் என்று எழுதியதற்கு 2 பெண்களுக்கு சிறை.நல்லா இருக்குடா உங்க நியாயம்...

இவனுங்க எல்லாம் காவல்துறை சீருடை கழற்றிவைத்துவிட்டு கக்கூஸ் கழுக போகலாம்...nanchil

முட்டாளுக்கும், முரடனுக்கும் தானப்பா சீக்கரத்தில பேர் கிடைக்குது :-(

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!