Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 7, 2013

அத்வானியை அழிக்க நினைத்தவன் கைது?

ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். 

புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. 

இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். 

அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா? போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும் கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

1 comments :

ஐதராபாத்-ல இந்தியன் முஜாஹிதீன் தான் ரெட்டை குண்டு வச்சான்-னு வாய் கிழிய கத்துனவங்களாம் கொஞ்சம் வாங்கபா.... இதோ தெளிவா சொல்லுறாரு ஐதராபாத் டிஜிபி தினேஸ் ரெட்டி...................

ரெண்டு பேருமா (போலீஸ்+மீடியா) சேர்ந்து கதை கட்டிவிட்டு-டு இப்ப நா.. இல்ல.. நீ.. நீ.. இல்ல.. நான்.... னு அடுச்சுக்கு நாற்ரானுக.
by. makkal.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!