பார்வையிலேயே (கண் அசைவு) பக்கத்தை புரட்டும் புது தொழில்நுட்ப கை பேசியை அறிமுகப்படுத்த உள்ளது சாம்சங் நிறுவனம்.
அப்பிள் நிறுவனத்தோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சம்சுங் நிறுவனம் ஜ-போனை மிஞ்சும் வகையில் தன்னுடைய அடுத்த தயாரிப்பை வரும் 14ம் திகதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
Galaxy S4என்ற இந்தப் புதிய செல்போன், பார்ப்பவரின் கண் அசைவைக் கொண்டு பக்கங்களை நகர்த்தும் தன்மை உடையதாக இருக்கும் என்று சம்சுங் நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
5 அங்குல திரை கொண்ட இந்த செல்போனில், 13 மெகா பிக்ஸல் கமெராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்சுங் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பாவில் ஐ-ஸ்க்ரோல் என்ற வணிக முத்திரைக்காகப் பதிவு செய்து பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் சம்சுங் ஐ-ஸ்க்ரோல் என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கைபேசி மற்றும் மடிக்கணனி போன்றவற்றை கண்களின் அசைவைக் கொண்டு இயக்கக்கூடிய கணனி பயன்பாட்டு மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மிகுந்த எதிர்பார்ப்புக்களும் ஊகங்களும் இந்த புதிய வெளியீடு குறித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
3 comments :
nalla thakaval...
தகவலுக்கு மிக்க நன்றி......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வரட்டும்... பார்க்கலாம்... தகவலுக்கு நன்றி...
Post a Comment