Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 24, 2013

ஆண்டிபயாட்டிஸ்க்கு கட்டுப்படா கிருமி! ஆய்வு அதிர்ச்சி?

லண்டன்: ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நுண்ணுயிர் எதிரிகளால் (மருந்துகளுக்கு) நோய்க் கிருமிகள் பாதிக்கப்படாத தன்மை அதிகரித்துவருவது, பயங்கரவாதத்தைவிட மேலும் பெரிய ஆபத்து என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.

புதிய ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், சாதாரணமாக நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள் கூட இன்னும் 20 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தானவையாகக் கூடும் என்று தலைமை மருத்துவ அதிகாரி சேலி டேவிஸ் கூறினார்.
இது ஒரு உலகளாவிய பிரச்சினை என்றும் , எப்போது வெடிக்கக்கூடிய குண்டு என்றும் அவர் வர்ணித்தார். ஒரு புதிய வகையைச் சேர்ந்த ஆண்டிபயாடிக் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 25 ஆண்டுகள் ஆகின்றன.
அதற்கு நேர் எதிராக, புதிய நோய்க் கிருமிகள் தினமும் உருவாகி வருகின்றன, மேலும், தற்போது இருக்கும் கிருமிகளும் சாதாரண சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படாத தன்மை உருவாகி வருகிறது என்று அவர் கூறினார்.
புதிய நுண்ணுயிர் எதிரிகளை (ஆண்டிபயாடிக் மருந்துகள்) உருவாக்க, மருந்து நிறுவனங்களுக்கு ஊக்கம் தரப்படவேண்டும் என்றும் சேலி டேவிஸ் கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!