Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 28, 2013

உணவு பண்டங்களின் கோட்வேடின் உள்நோக்கம்

E. கோட் ஐரோப்பா மற்றும் மேலை நாடுகளில் மறைத்து எழுதுவது நோக்கம் ப்போது புரியும் மேலே படியுங்கள். E Code என்றால் என்ன? அது ஏன் உருவாக்கப்பட்டது? எந்த எந்த E Code (தவிர்க்க வேண்டியது.)

இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது பன்றி இறைச்சிதான். இறைச்சிக்காகவே ஏகப்பட்ட பன்றிப்பண்ணைகள் அங்கே உண்டு. உதாரணமாக பிரான்சில் மட்டுமே சுமார் 42,000 பன்றிப்பண்ணைகள் இருக்கின்றன சகோ..! அப்படியெனில், மொத்த ஐரோப்பாவில் எத்தனை பன்றிகள் ஒருநாளைக்கு இறைச்சிக்காக கொல்லப்படும்..?

பன்றி இறைச்சியில்தான் மிக மிக அதிக கொழுப்புகள் உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விட்டுத்தான் ஐரோப்பியர் இறைச்சி விற்பனை செய்வார்கள். அப்படியெனில், மொத்த ஐரோப்பாவிலும் எத்தனை டன் கொழுப்பு சேரும் ஒரு நாளைக்கு..? எனவே, இப்படி நீக்கப்பட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்துவது நாளடைவில் மிகக்கடினமான காரியமாக மாறியது. ஆரம்ப காலத்தில் அவற்றை தீயிட்டு எரித்தனர். அப்போது அவை எண்ணெயாக உருகி ஓடியதை கண்டபோது, சூடு ஆறியபின் இருகுவதை கண்டபோது, ஐடியா பிறந்தது. அப்படித்தான் பன்றி இறைச்சி அந்த தோட்டாக்களை பாதுகாக்கும் உறையாகவும், சோப்புக்கட்டிகள் செய்யவும், சோள எண்ணெய்க்கு மாற்றாகவும் இன்னும் பலவாறாகவும் பயன்படுத்தப்பட்டன.



பின்னாளில், ஐரோப்பியர்கள் கடும் கொலஸ்டிரால் மூலம் பாதிக்கப்பட, அது பற்றியெல்லாம் அறிவியல் வளர்ந்து, அதன் காரணமாக மருத்துவ ரீதியில் உடல்நலக்குறைபாடு பிரச்சினை பற்றி அறிய ஆரம்பிக்க, இப்போது ஐரோப்பிய நாடுகள், ஒரு சட்டம் போட்டன. அதாவது, உணவுப்பண்டங்களில் பன்றிக்கொழுப்பை சேர்த்தால் அதனை பாக்கெட்டின் மீது எழுதவேண்டும் என..! அது மட்டுமில்லாது, அந்த விற்பனைக்குறிய பண்டத்தில் வேறு என்னன்ன மூலப்பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு உள்ளடங்கி உள்ளன என்பதையெல்லாம் ஒரு பட்டியலாக உறைமீது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு போனது அந்த சட்டம். அதன்படி அப்படியே எழுதி உலகெங்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் அப்போதுதான் அந்த இடி இறங்கியது..!


அதாவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு கொண்ட முஸ்லிம்கள், அந்த பொருட்களை புறக்கணிக்க ஆரம்பிக்க, அப்படிப்பட்ட பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனங்கள் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதற்காக, மலிவான பன்றிக்கொழுப்பை விட்டுவிட்டு, கிராக்கியான தாவர எண்ணெய் உபயோகித்து லாபத்தை இழக்கவும் மனதில்லை. புறக்கணிக்கும் அந்த எண்ணெய் வள நாடுகளின் வணிகமும் அவசியம் வேண்டும். என்ன செய்யலாம்..?

உடனடியாக ரூம்போட்டு அதிதீவிர சிந்தனையில் யோசித்த அவர்களின் மூலையில் உதித்தது ஓர் உபாயம்..! அதாவது, இனி... எந்தெந்த மூலப்பொருட்களையெல்லாம் உணவுப்பொருட்களின் உறைமீது எழுதினால் பிரச்சினை/எதிர்ப்பு வருமோ அதையெல்லாம் பெயராக எழுதாமல்... சங்கேத வார்த்தைகளாக எழுதுவது என்று..!

அந்த ஐடியாதான்... (E codes) ஈ கோடுகள்...! இதில் 'E' என்பது Europe..! 'ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் மண்டையில் உதித்த கள்ளத்தனம்' என்பதை பேட்டன்ட் போட்டு பெருமையாக பறைசாற்றிக்கொள்கிறார்கள்..! வெட்கக்கேடு..! வேதனை..!

தற்போது சர்வதேச அளவில் பொருட்கள் சந்தைபடுத்தப்பட்ட நிலையில் நீங்கள் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் பல பாக்கெட்/பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுப்பொருளை ஒவ்வொன்றாக எடுத்துப்பாருங்களேன் சகோ..! அதில், ingredients என்ற பகுதியில், E-210, E473, E-904 என்று இப்படி சில ஈ கோட்ஸ் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அவையெல்லாம் என்ன என்று எப்போதேனும் சிந்தித்ததுண்டா சகோ..?

1 comments :

This comment has been removed by a blog administrator.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!